'ஆயிரக்கணக்கான' உயிர்கள் பறிபோக 'காரணமான...' 'சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்...' 'அமெரிக்க' வெளியுறவு அமைச்சர் 'மைக்பாம்பியோ' எச்சரிக்கை...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா என்ற பெருந்தொற்றை உலகிற்கு அளித்த சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் Fox என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மைக் பாம்பியோ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். கொரோனா தொற்றுக்கு மூலமாக இருக்கும் சீனா உலக மக்களுக்கு அதிகபட்ச வேதனையை அளித்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.
ஆயிரக்கணக்கான உயிர்கள் பறிபோக காரணமாகவும், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் பொருளாதாரத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளதுமான கொரோனா குறித்த உண்மையான தகவல்களை சீனா ஆரம்பத்திலேயே மறைத்ததன் மூலம் உலக நாடுகளுக்கு சீனா துரோகம் இழைத்து விட்டதாக அவர் சாடினார். சீனாவின் இந்த செயலுக்கு அந்நாடு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும், உரிய இழப்பீட்டை அந்நாடு வழங்க கடமைப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
