நாங்க இப்போ ‘கொரோனா’ இல்லாத நாடு.. சந்தோஷமாக அறிவித்த அதிகாரிகள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Apr 29, 2020 08:30 AM

கொரோனா பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்ததை அடுத்து கொரோனா இல்லாத நாடாக ஏமன் மாறியுள்ளது.

Yemen’s only coronavirus patient recovers, out of quarantine

ஏமன் நாட்டில் பல ஆண்டுகளாக உள்நாட்டு சண்டை நடந்து வருகிறது. அந்நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுதி இன மக்கள் போரட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் ஏமன் நாட்டிலும் பரவியது. அந்நாட்டில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் வைரஸ் பரவல் ஏற்பட்டால் அதிக உயிரிழப்புகள் ஏற்படலாம் என அச்சம் எழுந்தது.

கடந்த 10ம் தேதி ஹட்ராமொண்ட் மாகாணம் அஷ் ஷஹூர் நகரை சேர்ந்த 60 வயது அரசு அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இதனை அடுத்து வைரஸ் பாதிக்கப்பட்ட நபர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவரின் குடும்பத்தினர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

வைரஸ் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்த 120 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அரசு அதிகாரியும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதனால் கொரோனா வைரஸ் பாதிப்பில்லாத நாடாக ஏமன் மாறியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்