‘அதிவிரைவு சோதனை மெஷின்களை’... ‘இந்தியாவிற்கு வழங்க முன்வந்துள்ள நாடு’... ‘ஒரேநேரத்தில் இத்தனை ஆயிரம் பேருக்கு’... ‘சோதனை செய்ய முடியும்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Apr 24, 2020 07:08 PM

கொரோனா சோதனையை விரைவுபடுத்த 6 அதிவிரைவுச் சோதனை எந்திரங்களை அமெரிக்காவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்ய உள்ளது.

India to get high-speed testing machines from America

அமெரிக்காவின் ரோச் நிறுவனத்திடம் இருந்து 6 அதிவிரைவுச் சோதனை எந்திரங்களை இந்தியா வாங்க உள்ளதாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். இந்த கருவிகள் மூலம் ஆறாயிரம் முதல் எட்டாயிரம் சோதனைகள் வரை ஒரே நேரத்தில் செய்ய முடியும்.

உள்நாட்டிலேயே தேவை அதிகமிருக்கும் நிலையிலும் இந்தியாவுக்கு இவற்றை இறக்குமதி செய்ய அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்தே தற்போது அதிவிரைவு எந்திரங்கள் வழங்கப்படுகிறது. சீனாவில் இருந்து கடந்த இரு வாரங்களில் 24 விமானங்களில் 400 டன் மருத்துவக் கருவிகள், வெப்பமானிகள், முகக்கவசங்கள், உடல்காப்புக் கவசங்கள் ஆகியன இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், வரும் நாட்களில் மேலும் 20 விமானங்களில் பொருட்கள் வரவுள்ளதாகவும் அனுராக் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், கொரோனா சிகிச்சைக்கான ஹைட்ராக்சி குளோரோயின் மருந்து அமெரிக்காவிற்கு, இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.