‘முன்னாடி கூட பாக்காம’.. ‘வேற மாதிரி’ பந்துவீச்சால் வியப்பில் அழ்த்தும் இளம்வீரர்.. ‘வைரலாகும் வீடியோ’..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Nov 18, 2019 08:16 PM

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் கெவின்  கோத்திகோடா வித்தியாசமான முறையில் பந்துவீசும் வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video SriLanka Kevin Koththigodas Weird Bowling In T10

அபுதாபியில் நடைபெறும் டி10 தொடரில் பங்களா டைகர்ஸ் - டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணிகள் மோதிய போட்டியில்  கெவின் கோத்திகோடாவின் வித்தியாசமான பந்துவீச்சு முறை அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது. வித்தியாசமாக பந்து வீசிய கோத்திகோடா ஷேன் வாட்சன், அன்டன் டெவ்சிச் ஆகியோரையே தடுமாற வைத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து கோத்திகோடா பந்துவீசும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. இவர் பந்துவீசும் முறை தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பால் ஆடம்ஸ் போல் உள்ளதாக பலரும் கூறி வருகின்றனர். ‘Frog in a blunder’ என பால் ஆடம்ஸ் பெயர் வாங்கியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Tags : #CRICKET #SRILANKA #KEVINKOTHTHIIGODA #BOWLING #VIRAL #VIDEO #T10