‘பந்து எங்க போய் எங்க வருது’.. ‘ஷாக்’ ஆகி நின்ற பேட்ஸ்மேன்.. ‘எப்படி எல்லாம் அவுட் பண்றாங்க!’..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Nov 15, 2019 01:54 PM

ஷெஃபீல்ட் கிரிக்கெட்டில் ஸ்டீவ் ஸ்மித்திற்கு விசித்திரமான முறையில் விக்கெட் கிடைக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Video Steve Smith Picks Up Bizarre Wicket In Sheffield Shield

ஷெஃபீல்ட் கிரிக்கெட்டில் நியூசவுத்வேல்ஸ் அணிக்காக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்ததோடு, கடைசி இன்னிங்ஸில் பவுலிங்கும் செய்துள்ளார். அப்போது 6 ஓவர்களில் 2 ஓவர்களை மெய்டனாக வீசிய ஸ்மித்திற்கு விசித்திரமான முறையில் விக்கெட் ஒன்றும் கிடைத்துள்ளது.

மேற்கு ஆஸ்திரேலியாவின் வலது கை பேட்ஸ்மேனான ஜோஷ் இங்லைஸ் ஸ்டீவ் ஸ்மித்தின் லெக் ஸ்பின்னரை அடிக்க, அது சில்லி மிட் ஆஃபில் இருந்த ஃபீல்டர் உடலில் பட்டு நேராக ஷார்ட் லெக் ஃபீல்டர் கையில் கேட்சாக  மாறியுள்ளது. இப்படி விசித்திரமான முறையில் அவுட் ஆனதால் ஷாக் ஆகி நின்ற பேட்ஸ்மேன் இங்லைஸ் பின் கடுப்புடன் வெளியேறியுள்ளார்.

இந்தப் போட்டியில் மேற்கு ஆஸ்திரேலிய அணி 128 ரன்களுக்கு சுருண்டு தோல்வியடைந்துள்ளது. போட்டியின்போது ஸ்மித்திற்கு விசித்திரமான முறையில் விக்கெட் கிடைக்கும் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

 

Tags : #CRICKET #STEVESMITH #VIRAL #VIDEO