‘உலகக் கோப்பைக்குப் பிறகு’.. ‘பயிற்சியைத் தொடங்கிய தோனி’.. ‘வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்கிறாரா?’..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Nov 15, 2019 07:08 PM

உலகக் கோப்பைக்குப் பிறகு ராஞ்சியில் இன்று தோனி வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

MS Dhoni starts training but not available for West Indies series

உலகக் கோப்பைக்கு பிறகு கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து ஒதுங்கி இருந்த தோனி, ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டதால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தனது பெயரை பரிசீலிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். அதன்பின் நடைபெற்ற அடுத்தடுத்த போட்டிகளிலும் அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. மேலும் நவம்பர் மாதம் வரை தன்னை அணியில் பரிசீலிக்க வேண்டாம் எனவும் தோனி கேட்டுக்கொண்டதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் உலகக் கோப்பைக்குப் பிறகு இன்று ராஞ்சியில் தோனி வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதைத்தொடர்ந்து தற்போது அடுத்ததாக நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் தோனி விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ராஞ்சியில் தோனி வலைப்பயிற்சி செய்யும் வீடியோவை உற்சாகத்துடன் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

 

 

Tags : #CRICKET #MSDHONI #TEAMINDIA #VIDEO #VIRAL