'ஒரே ' ஆளுதான்.. அம்புட்டு பேரும் 'குளோஸ்'.. அந்த கொடுமைய 'நீங்களே' பாருங்க!
முகப்பு > செய்திகள் > உலகம்By Manjula | Nov 17, 2019 08:21 PM
சில நேரங்களில் நாம் செய்யும் சிறு விஷயங்களும் பெரிய விஷயமாக உருவெடுத்து விடும். அதிலும் கூட்டாக செய்யும் வேலைகளில் யாரேனும் சொதப்பினால் அவ்வளவு தான். ஒட்டுமொத்த உழைப்பும் வீணாகி விடும். அதற்கு எடுத்துக்காட்டாக இந்த வீடியோவை சொல்லலாம்.

சைக்கிள் ரேஸ் ஒன்று நடைபெறுகிறது. அத்தனை பேரும் ஒன்று சொன்னது போல சைக்கிளை ஒழுங்காக மேடு பள்ளங்களில் ஏறி, இறங்கி ஓட்டி செல்கின்றனர். அதில் ஒருவர் மட்டும் திடீரென கீழே விழ, பின்னால் வந்த அத்தனை பேரும் ஒரே நேரத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து கீழே விழுகின்றனர்.
#அடேய்...
"ஒரு ஆளு தடுமாறி விழுந்தான்.
மொத்தமும் குளோஸ் மொமண்ட்?" pic.twitter.com/OWzGng1a2P
— விஷ்வா I Viswa I (@ChennaiViswa) November 16, 2019
சில நிமிடங்களில் அந்த இடமே கலவரமாகி விடுகிறது. கடைசியில் முட்டிமோதி அனைவரும் தங்களது சைக்கிளை எடுத்து மீண்டும் ஓட்டி செல்கின்றனர். இந்த வீடியோ பத்தி நீங்க என்ன நெனைக்கிறீங்க?
