‘நடுவானில் நிலைகுலைந்த விமானம்’.. ‘தூக்கிவீசப்பட்ட பயணிகள்’.. நெஞ்சை பதபதைக்கும் வீடியோ காட்சி!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Jun 18, 2019 07:16 PM

காற்றத்தழுத்தால் நடுவானில் விமானம் நிலைகுலைந்ததில் பயணிகள் பல காயமடைந்துள்ளனர்.

WATCH: Intense flight turbulence leaves 10 injured

கொசோவோ தலைநகர் பிரிஸ்டினாவில் இருந்து சுவிட்சர்லாந்தின் பேசல் நகருக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. ஆனால் புறப்பட்ட 30 நிமிடங்களில் விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் நடுவானில் விமானம் நிலைகுலைந்துள்ளது. அப்போது உணவு வண்டியை தள்ளிக்கொண்டு வந்த பணிபெண் ஒருவர் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதில் உணவு வண்டியில் இருந்த சூடான காபி கொட்டியதில் பயணிகள் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் விமானம் நிலைகுலைந்து அங்குமிங்கும் பறந்ததில் பயணிகள் பலரும் சீட்டில் இருந்து தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்துள்ளனர். இதனை அடுத்து சில நிமிட போராட்டத்துக்குபின் விமானம் பத்திரமாக தரையிறங்கியுள்ளது. மேலும் இந்த விபத்தில் 10 பயணிகள் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நடுவானில் விமானம் நிலைகுலைந்ததை பயணி ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags : #FLIGHT #CRASH #INJURY