‘நாளை தொடங்கும் உலகக்கோப்பை’.. முக்கிய வீரர் திடீர் விலகல்.. காயம் காரணமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | May 29, 2019 06:53 PM

தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் காயம் காரணமாக உலகக்கோப்பையின் முதல் போட்டியில் விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Dale Steyn has been ruled out of South Africa\'s World Cup 2019 opener

தென் ஆப்பிரிக்காவின் சிறந்த வேகப்பந்து வீச்சாளாரான டேல் ஸ்டெய்ன், நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடினார். முதலில் ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்படாத ஸ்டெய்ன், பெங்களூரு வீரர் நாதன் கவுல்டர் நிலே காயம் அடைந்ததால் அவருக்கு பதிலாக விளையாட அழைக்கப்பட்டார்.

அதுவரை தொடர் தோல்விகளை சந்தித்து வந்த பெங்களூரு அணி ஸ்டெய்ன் வருகைக்கு பின் தொடர் வெற்றிகளை சந்திக்க ஆரம்பித்தது. ஆனால் காயம் காரணமாக திடீரென பாதியிலேயே நாடு திரும்பினார். இதனை அடுத்து உலகக்கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பிடித்தார்.

இந்நிலையில் காயம் சரியாகத்தால் ஸ்டெய்ன் உலகக்கோப்பையின் முதல் போட்டியில் விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நாளை நடைபெறும் உலகக்கோப்பையின் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதுகின்றன.

Tags : #ICCWORLDCUP2019 #STEYN #INJURY