மறுபடியும் ஒரு சோதனையா..! காயத்தால் மீண்டும் ஒரு முக்கிய வீரர் விலகல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Jun 18, 2019 10:56 AM
காயம் காரணமாக இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர் விலகியிருப்பதால் அந்த அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

12 -வது உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தின் பல பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை முடிந்த 23 லீக் போட்டிகளில் 8 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி முதல் இடத்திலும், 7 புள்ளிகளுடன் நியூஸிலந்து அணி இரண்டாவது இடத்துலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளன.
அதேபோல் இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 3 -ல் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி 6 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருவதால், அந்நாட்டு அணி உலகக்கோப்பை வெல்ல வாய்ப்பு உள்ளதாக முன்னாள் வீரர்கள் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அதை நிரூபிக்கும் வகையில் ஒவ்வொரு போட்டியிலும் இங்கிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய்க்கு காயம் ஏற்பட்டுள்ளதால் இரு போட்டிகளுக்கு விளையாடமாட்டார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மேற்கிந்திய தீவுக்கு எதிரான போட்டியில் பீல்டிங் செய்யும் போது ஜேசன் ராய்யின் காலில் காயம் ஏற்பட்டது. அதேபோல் இங்கிலாந்து அணியின் கேப்டனும் தொடக்க ஆட்டக்காரருமான இயன் மோர்கனுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவ பரிசோதனையில் உள்ளார். இரு முக்கிய வீரர்கள் காயத்தால் விலகியிருப்பது இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
