‘அயன்’ பட பாணியில் வயிற்றில் போதை மருந்து கடத்தல்..! நடுவானில் நடந்த பரபரப்பான நிமிடங்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | May 28, 2019 02:37 PM

சினிமா பாணியில் வயிற்றில் போதைப்பொருள் கடத்தி விமானத்தில் பயணம் செய்த நபர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

Man dies on flight after swallowing 246 packets of cocaine

ஜப்பானைச் சேர்ந்த பயணி ஒருவர், கொலம்பியாவின் தலைநகர் போகோடாவில் இருந்து டோக்கியாவிற்கு ஏரோமெக்ஸிக்கோ என்னும் விமானத்தில் பயணம் செய்துள்ளார். விமானம் நடுவானில் சென்றுகொண்டிருக்கும் போது திடீரென அந்த பயணிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து உடனடியாக மெக்சிக்கோவில் விமானம் தரையிரக்கப்பட்டுள்ளது. அங்கு அந்த நபரை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவரின் வயிற்றை பரிசோதித்து பார்த்ததில் சிறிய அளவில் சுமார் 246 பாக்கெட்டுகள் கொண்ட கொகைன் என்னும் போதைப்பொருள் இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். வயிற்றில் இருந்த கொகைன் பாக்கெட்டுகளில் சில பிரிந்துள்ளதால் அதிகமான போதைப்பொருள் அவரின் ரத்ததில் கலந்து உயிரிழந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல் ‘அயன்’ என்னும் தமிழ் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #TOKYO #FLIGHT #DRUGS