‘ஃபீல்டிங்கின் போது பலத்த காயமடைந்த சிஎஸ்கேவின் அதிரடி பேட்ஸ்மேன்’.. ப்ளே ஆஃப்பில் விளையாடுவது சந்தேகம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | May 05, 2019 11:35 PM

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது சென்னை அணி வீரருக்கு தோல்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதால் அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.

IPL 2019: Jadhav injured his left shoulder while fielding

ஐபிஎல் டி20 லீக்கின் 55 -வது போட்டி இன்று(05.05.2019) மொகாலியில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக டு பிளிஸிஸ் 96 ரன்களும், சுரேஷ் ரெய்னா 53 ரன்களும் எடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 18 ஓவர்களின் முடிவில் 173 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் க்றிஸ் கெய்ல் களமிறங்கினர். ஆரம்பம் முதலே ராகுல் அதிரடியாக ஆட ஆரம்பித்தார். 108 ரன்களில் தான் சென்னை அணி தனது முதல் விக்கெட்டை எடுத்தது.  ஆனாலும் 18 புள்ளிகளுடன் சென்னை அணி தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது.

இப்போட்டியில் ஃபீல்டிங் செய்யும் போது எதிர்பாரதவிதமாக சென்னை அணியின் ஆல்ரவுண்டர் க்ர்ர்தர் ஜாவுற்க்கு தோல்பட்டையில் காயம் ஏற்பட்டதால் அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. இன்னும் உலகக் கோப்பை வர சில வாரங்களே உள்ள நிலையில்  கேதர் ஜாதவ் காயமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #IPL #IPL2019 #CSK #KEDARJADHAV #INJURY