காயம் காரணமாக உலகக்கோப்பையில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர்!.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | May 08, 2019 12:24 PM

தோல்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உலகக் கோப்பையில் இருந்து விலகியுள்ளார்.

Jhye Richardson ruled out of the World Cup, Due to shoulder injury

ஒருநாள் கிரிக்கெட்டுக்கான உலகக்கோப்பை தொடர் மே மாதம் 30 -ம் தேதி முதல் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஒவ்வொரு நாட்டு அணி வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடர் முடிந்த பின்னர் பயிற்சியில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி டேவிட் வார்னர், மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி ஸ்டீவ் ஸ்மித் போன்ற ஆஸ்திரேலிய வீரர்கள் உலகக்கோப்பை பயிற்சிக்காக நாடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான பயிற்சி ஆட்டத்தின் போது ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜே ரிச்சர்ண்ட்சனுக்கு தோல்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் உலக்கோப்பையில் இருந்து அவர் விலகியுள்ளார். மேலும் அவருக்குப் பதிலாக மற்றொரு வீரரான கேன் ரிச்சர்ட்ண்ட்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Tags : #ICCWORLDCUP2019 #JHYE RICHARDSON #INJURY