பயிற்சியின் போது பலத்த காயமடைந்த வீரர்..! உலகக்கோப்பையில் விளையாடுவது சந்தேகம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jun 10, 2019 04:57 PM

இலங்கை வேகப்பந்து வீச்சாளர் நுவான் ப்ரதீப்க்கு பயிற்சியில் ஈடுப்பட்ட போது கையில் பலத்த காயம் அடைந்துள்ளது.

Nuwan Pradeep to miss Bangladesh match after dislocating finger

வங்க தேச அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் சுற்றில் விளையாடுவதற்காக இலங்கை வீரர்கள் பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். இதில் இலங்கை பேட்ஸ்மேன் குஷல் பேரேரா மற்றும் நுவான் ப்ரதீப்பும் வலை பயிற்சியை மேற்கொண்டுள்ளனர். அப்போது பேரேரா அடித்த பந்து ப்ரதீப்பின் முகத்துக்கு நேராக வந்துள்ளது. இதை தடுக்க ப்ரதிப் கையை நீட்டியபோது அவரின் விரலில் பலமாக அடித்து காயம் ஏற்பட்டது.

இதனால் அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். இதில் ப்ரதீப்பின் கையில் கட்டுப் போடப்பட்டுள்ளதால், அவர் ஒரு வாரத்திற்கு ஓய்வு எடுக்கவேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ப்ரதீவ் விளையாடமாட்டார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேலும் அவருக்கு பதிலாக கஷன் ரஜிதா அணியில் சேர்கப்பட்டுள்ளார். இலங்கை அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய நுவான் ப்ரதீப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Tags : #ICCWORLDCUP2019 #INJURY