‘6 பேரால் 2 நாட்களாக’.. ‘சிறுமிக்கு நடந்த பதைபதைக்க வைக்கும் சம்பவம்’.. ‘மயக்க நிலையில் மீட்ட பின்’.. ‘ஊர்கூடி செய்த கொடூரம்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Aug 28, 2019 11:37 AM

பீகாரில் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமிக்கு பஞ்சாயத்தில் தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Minor girl gang raped tonsured paraded in Bihar 6 detained

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலையில் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது அவரை வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று கடத்திச் சென்றுள்ளது. பின்னர் சிறுமியை கிராம பஞ்சாயத்து அலுவலகத்தின் மாடிக்குக் கொண்டு சென்ற அந்த கும்பல் அங்கு வைத்து அவரை மயக்கம் அடையும் வரை மீண்டும் மீண்டும் 2 நாட்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.

அதற்கு அடுத்த நாள் காலையிலேயே சிறுமி அங்கு மயங்கிக் கிடப்பது ஊர்க்காரர்களுக்கு தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்த தகவல் சிறுமியின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டு, கிராம பஞ்சாயத்திலும் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் வலிமை படைத்தவர்களாக இருந்ததால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பஞ்சாயத்தில் தண்டனை வழங்கப்பட்ட கொடூரம் நடந்துள்ளது.

பஞ்சாயத்தில் சிறுமிக்கு மொட்டையடித்து அவரை கிராமத்தைச் சுற்றி வரச் செய்துள்ளனர். இந்த சம்பவம் நடைபெற்று 11 நாட்கள் கழித்தே சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து போலீஸில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரும் மாவட்ட கண்காணிப்பாளரிடம் முறையிட்ட பிறகே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் இதுவரை பஞ்சாயத்து உறுப்பினர்கள் 5 பேரும்,  சிறுமி அடையாளம் காட்டிய பாலியல் வன்கொடுமை செய்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்திச் சென்ற கும்பலில் இருந்த மற்ற நபர்களை சிறுமியால் அடையாளம் காட்ட முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டுள்ள பீகார் பெண்கள் நல ஆணையம் கயா மாவட்ட கண்காணிப்பாளர் செப்டம்பர் 2ஆம் தேதி ஆணையத்தின் முன்பு ஆஜராகி விளக்க அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Tags : #BIHAR #MINOR #GIRL #KIDNAPPED #GANGRAPED #TONSURED #VILLAGE #PANCHAYAT