“இங்க அதுக்கெல்லாம் இடமில்ல!”.. “துப்பாக்கிச் சூடு நடத்தும் முன் இளைஞர் போட்ட பதிவு!”.. “ஆக்ஷனில் இறங்கிய பேஸ்புக்!”
முகப்பு > செய்திகள் > இந்தியாCAAவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபரின் பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் குடியுரிமைச் சட்டத்துக்கு அதிருப்தி தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் மீது, திடீரென அங்கு வந்த நபர் ஒருவர் தாக்குதல் நடத்தும் விதமாக துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்.
இதனால் ஒருவர் படுகாயம் அடைந்தார். அதன் பின்னர் போலீஸார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அதன் பின்னர் போலீஸார் அவரை விசாரித்ததில், துப்பாக்கிச் சூடு நடத்திய அந்த நபர், நொய்டாவைச் சேர்ந்த 19 வயதான கோபால் ஷர்மா என்கிற இளைஞர் என்பது தெரியவந்தது. முன்னதாக அந்த நபர் தனது பேஸ்புக்கில் ஒரு வைல் வீடியோ பதிவிட்டிருந்துள்ளார்.
இதை கவனித்த பேஸ்புக், அவரது கணக்கை முடக்கியதோடு, ‘இது போன்ற வன்முறைச் சம்பவங்களுக்கு இங்கு இடம் கிடையாது. அதனால் அவரது கணக்கு முடக்கப்பட்டதோடு அந்த பதிவுகளும் நீக்கப்பட்டுவிட்டன, அவருக்கு ஆதரவான பதிவுகளும் விரைவில் அடையாளம் காணப்பட்டு நீக்கப்படும்’ என்றும் குறிப்பிட்டுள்ளது.
