'கதவு லென்ஸ் வழியா பாத்தேன்'... 'என் வீட்டு வாசலில் தாலிபான்கள் செய்த சம்பவம்'... உயிரை கையில் பிடித்து கொண்டு மாணவி வெளியிட்ட வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்தாலிபான்களின் உண்மை முகம் குறித்து 22 வயது மாணவி ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானைத் தாலிபான்கள் முழுமையாகக் கைப்பற்றிவிட்ட நிலையில், இனிமேல் அங்கு என்ன நடக்கப் போகிறதோ என்பது தான் உலக நாடுகளின் பெரும் கவலையாக உள்ளது. ஒரு பக்கம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள மக்கள் போராடும் நிலையில் மறுபக்கம் பெண்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் என்ன ஆகப் போகிறதோ என்பதும் பெரும் அச்சமாக உள்ளது.
பல்கலைக்கழகங்களில் படித்து வரும் மாணவிகள் இனிமேல் படிப்பைக் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாதோ என்ற பெரும் அச்சத்தில் உள்ளார்கள். இந்நிலையில் காபூலில் உள்ள பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு படித்து வரும் ஆயிஷா குராம் என்ற 22 வயது மாணவி ஒருவர் அதிர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ''தாலிபான்கள் நாட்டை கைப்பற்றிய முதல் நாளிலேயே தங்களது ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார்கள். எனது வீட்டு வாசலில் ஏதோ சத்தம் கேட்கிறது என எனக்குத் தோன்றியது. ஆனால் கதவைத் திறந்து பார்க்கும் நிலையில் நான் இல்லை. அப்போது தான் எனது வீட்டு வாசலில் துப்பாக்கி சுடும் சத்தத்தையும், அலறல் சத்தத்தையும் கேட்டு என்ன நடக்கிறது என்பதை ஒளிந்து இருந்து பார்த்தேன்.
மேலும் சில திருடர்கள் தங்களைத் தாலிபான்களின் ஒரு பகுதியான முஜாயிதீன் எனக் கூறிக் கொண்டு பொதுமக்களின் பொருட்களையும், கார்களையும் திருட முயன்றனர். தாலிபான்கள் நாட்டை கைப்பற்றிய அன்றைய தினம் கல்லூரி ஆசிரியர், ஆசிரியைகள் மாணவிகளுக்கு மட்டும் குட்பை சொன்னார்கள். பெண்கள் இனி பல்கலைக்கழகம் வரக்கூடாது அல்லது ஆண் மாணவர்களுடன் சேர்ந்து பல்கலைக்கழகத்தில் இருக்கக்கூடாது என்ற தாலிபான்களின் மிரட்டலைப் பிரதிபலிப்பதாகவே அந்த குட்பை இருந்தது.
நாங்கள் பெண்களின் பாதுகாப்பிற்கும், உரிமைக்கும் முக்கியத்துவம் கொடுப்போம் என தாலிபான்கள் கூறினார்கள். ஆனால் நடப்பதைப் பார்த்தால் நிச்சயம் அப்படி இருக்கப் போவதில்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
எங்களது எதிர்காலம் என்ன ஆகப் போகிறது என்பது குறித்த அச்சம் நிலவுகிறது. ஆனால் உலகம் எங்களைத் தனித்து விடாது என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு பொழுதையும் கழித்துக் கொண்டு இருக்கிறோம்'' என வேதனையுடன் கூறியுள்ளார்.
"I personally do not know whether I would be able to go back to university."
— Bloomberg (@business) August 23, 2021
What will Afghanistan be like for women and girls under Taliban rule? 22-year-old @AishaKHM is hopeful but vigilant of what this new reality could bring. https://t.co/lf1qqnaL8Z via @bopinion @Quicktake pic.twitter.com/bjsnO7Qic1

மற்ற செய்திகள்
