'உயிர கையில பிடிச்சிட்டு இருக்கணும்...' 'விஷயம் தெரிஞ்சுதுன்னா ஆள் காலி...' 'தாலிபான்கள் கிட்ட கெடச்ச...' இந்த 'பயோமெட்ரிக் டிவைஸ்'னால பெரிய பிரச்சனை காத்திருக்கு...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தான் நாட்டை முழுவதுமாக தாலிபான் தீவிரவாத அமைப்பினர் கைப்பற்றியுள்ளது குறித்து பல நாடுகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன.
இந்த நிலையில், தங்கள் புதிய அரசில் பெண்களும் இடம்பெறுவார்கள் என்று தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். மேலும், முந்தையை சூழலைக் கொண்டு எந்தவித பழிவாங்கல் நடவடிக்கைகளிலும் ஈடுபட மாட்டோம் என்று கூறியுள்ளனர்.
இதனிடையே, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் பயன்படுத்திய பயோமெட்ரிக் கருவிகளை தாலிபான்கள் கையில் கிடைத்தன் மூலம் புதிய தலைவலி உருவாகியுள்ளது.
HIIDE என்று அழைக்கப்படும் இந்த பயோமெட்ரிக் கருவியில் விழி ரேகை, கை ரேகை, உடலின்அடையாளங்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன. தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் ஆகியோரை கண்டறிய இந்த கருவிகள் பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், அமெரிக்க ராணுவத்துக்கு உதவியாக இருந்த ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்களின் விவரங்களும் இந்த கருவியில் காணப்படும். அமெரிக்க ராணுவத்துடனான கூட்டு முயற்சியில் ஈடுபட்ட உள்ளூர் மக்களின் தகவல்கள் இதில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிரபல ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், பயோமெட்ரிக் கருவியை இயக்க தாலிபான்களுக்கு கூடுதல் கருவிகள் தேவைப்படும் என்னும் நிலையில், பாகிஸ்தான் அதற்கு உதவ வாய்ப்புள்ளது என முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் கூறியுள்ளார்.
பயோமெட்ரிக் கருவியை நீண்ட காலமாகவே அமெரிக்கா உபயோகப்படுத்தி வருகிறது. 2011-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடனை பிடிப்பதற்காக அமெரிக்க நடத்திய தேடுதல் வேட்டையின்போது இந்த கருவி பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தாலிபான்கள் கையில் இந்த கருவி சிக்கியுள்ளதால் அமெரிக்காவுக்கு உதவி செய்த ஆப்கானிஸ்தான் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.