"உங்களுக்கு 'பத்து செகண்ட்' தான் டைம்...! எங்க அந்த ஆளு...? 'அவரு வீட்ல இல்லங்க...' 'சொன்ன அடுத்த செகண்டே..." தாலிபான்கள் செய்த அதிர்ச்சி சம்பவம்! - என்ன நடந்தது?
முகப்பு > செய்திகள் > உலகம்தாலிபான்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆப்கானில் வெளிநாட்டு ஊடகவியலாளர்களை தேடி சென்று தாக்குதல் நடத்துவதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஆப்கான் முழுவதுமாக தாலிபான் தீவிரவாத படையின் கட்டுப்பாட்டுக்குள் வந்து ஐந்து நாட்கள் ஆகியுள்ள நிலையில், தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானில் வீடு வீடாக சென்று பத்திரிகையாளர்கள், அமெரிக்க, நேட்டோ படை ஆதரவாளர்கள், தூதரக ஊழியர்கள் என அனைவரையும் வேரறுக்க ஆரம்பித்துவிட்டனர்.
இந்நிலையில், ஜெர்மனி நாட்டின் டட்ஷே வெல் (Deutsche Welle) பத்திரிக்கையின் இயக்குநர் பீட்டர் லிம்போர்க் இதுகுறித்து கூறும்போது, 'தாலிபான்கள் 1996-ஆம் ஆண்டு செய்தது போன்று இப்போது நடக்க மாட்டோம் என்று கூறினர். ஆனால் அவர்கள் சொன்னது ஒன்று, அங்கு செய்துக்கொண்டிருப்பது வேறொன்று.
தாலிபான்கள் ஒவ்வொரு வீடாக சென்று அவர்கள் பட்டியலில் இருக்கும் நபர்களை குறித்து விசாரித்து வருகின்றனர். அதேபோல் எங்கள் பத்திரிகையைச் சேர்ந்த நிருபரை அவர்கள் நீண்ட காலமாக தேடி வருகின்றனர். ஆனால் அவர் இப்போது ஜெர்மனியில் பணியில் உள்ளார்.
அவரின் உறவினர் வீட்டிற்கு சென்ற தாலிபான் படையினர், அவரை குறித்து கேட்டுள்ளனர். அவர் அங்கு இல்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். பத்து வினாடிகளில் அவர் இருக்கும் இடத்தை சொல்லவில்லை என்பதால் அவருடைய உறவினர்களில் ஒருவரைக் கொலை செய்துள்ளனர்.
தாலிபான்கள் ஆட்டத்தைத் தொடங்கிவிட்டனர். இனி நேரமில்லை. அனைவரையும் காப்பாற்றியாக வேண்டும்' எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
