பார்க்க 'அப்படியே' அச்சு அசலா 'ஸ்மித்' மாதிரியே இருக்காரு...! 'ஆப்கான்'ல அவருக்கு என்ன வேலை...? 'ஆச்சரியத்தில் ரசிகர்கள்...' - வைரலாகும் ஃபோட்டோ...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் ஆட்சியை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதன் காரணமாக, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்களின் தூதர்கள், மக்களை வெளியேற்றி வருகின்றன.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவம் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், காபூல் விமான நிலையத்தில் பணியில் இருந்த அமெரிக்க ராணுவ வீரர் ஒருவரிடம் ஆப்கான் பெண்மணி ஒருவர் தன் குழந்தையாவது நிம்மதியாக வாழட்டும் என கம்பி வேலியைத் தாண்டி கொடுத்தார். குழந்தையை வாங்கிய ராணுவ வீரர் கண்ணீர்விட்டு அழுதார். அந்த புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
அந்தப் புகைப்படத்தில் இருப்பவர் பார்ப்பதற்கு அச்சு அசலாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் சாயலுடன் இருந்தார். இதனையடுத்து, அந்தப் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் ஸ்டீவ் ஸ்மித் போன்று இருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிலர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
அதில், "ஸ்டீவ் ஸ்மித் ஆப்கானில் என்ன செய்கிறார்? உண்மையில் இது பெரிய வேலை தான்" என பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் தற்போது, டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.