எங்க நாட்டோட 'பெயர' மாத்திட்டோம்...! 'ஆனா இது 'புதிய பெயர்'லாம் இல்ல...! - அதிரடியாக அறிவித்த தாலிபான்கள்...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறிய நிலையில், முக்கிய நகரங்களை படிப்படியாக கைப்பற்றி வந்த தாலிபான்கள், கடந்த 15-ஆம் தேதி அன்று நாட்டின் தலைநகரமான காபூலை பிடித்து 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளனர்.
இதனையடுத்து, ஆப்கானிஸ்தான் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதற்காக சாரைசாரையாக காபூல் விமான நிலையம் நோக்கி சென்றனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் விமான சக்கரங்களில் பயணம் செய்த காரணத்தினால் கீழே விழுந்து என நான்கு நாட்களில் நாற்பது பேர் மரணமடைந்தனர். அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்து உயிரை விடுவதற்கு பதிலாக வீட்டுக்குள் இருங்கள் என்று தாலிபான்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
போராட்டங்களுக்கு மத்தியில் ஆப்கானிஸ்தானில் புதிய அரசு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தாலிபான்கள் அது தொடர்பாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் உள்ளிட்டோருடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
ஆட்சி குறித்தும் அதிகாரம் குறித்தும் தலிபான்களின் மூத்த தலைவர் ஷாஷிமி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஷரியத் சட்டத்தின் அடிப்படையில்தான் அரசியல் செய்ய போகிறோம் எனும்போது அதுகுறித்து விவாதிக்க என்ன இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் பெயரை தற்போது 'இஸ்லாமிய அமீரக ஆப்கானிஸ்தான்' என தாலிபான்கள் பெயர் மாற்றியுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாமிய அமீரக ஆப்கானிஸ்தான் என்ற பெயரில்தான் தாலிபான்கள் ஆட்சி செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.