"தங்கமான' மனுஷங்கயா தாலிபான்கள்...!" - சர்ச்சை பேச்சால் தனக்கு தானே 'ஆப்பு' வைத்துக்கொண்ட பிரபல கவிஞர்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரபல கவிஞர் ராணா மீது, லக்னோ அடுத்த ஹஸ்ரத்கஞ்ச் கோட்வாலி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை ஆய்வாளர் ஷ்யாம் சுக்லா கூறும்போது, ‘கவிஞர் ராணாவுக்கு எதிராக வால்மீகி சம்ஜா தலைவர் பிஎல் பாரதி என்பவர் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், தாலிபான்களை வால்மீகி மகரிஷியுடன் ஒப்பிட்டு கவிஞர் ராணா ஒப்பிட்டு பேசியுள்ளார். இவருடைய பேச்சு நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் மனதை புண்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட மத நம்பிக்கை கொண்ட மக்களை, இவரது பேச்சு பாதித்துள்ளதாக கூறியுள்ளார். தொடர் விசாரணையில், டிவி சேனல் நேர்காணலில் கலந்துரையாடிய கவிஞர் முனவர் ராணா, தாலிபான்களை வால்மீகி மகரிஷியுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில், அவர் தாலிபான்கள் கெட்டவர்கள் இல்லை. தற்போது நல்லவர்களாக மாறிவிட்டனர். முன்பு போன்று அவர்கள் தற்போது இல்லை. சூழல் தான் அவர்களை கெட்டவர்களாக மாற்றியது. நாம் தாலிபான்களை இப்போது நம்பலாம் என்று கூறியுள்ளார்.
இவரது பேச்சு, இரு சமூக மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருப்பதால், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.