'தாலிபானா இது'?.. 'ஆமா தாலிபான் 2.0'!.. அமெரிக்க ராணுவம் மாதிரி... ஸ்டைலா மாஸா... டோட்டலா மாறிட்டாங்க!.. வைரல் புகைப்படங்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்ததை அடுத்து, அங்கு அரங்கேறி வரும் சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தாலிபான்களின் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் வந்துள்ளது. இதனால், உலக நாடுகளின் பார்வை முழுவதும் அந்த நாட்டின் மீது திரும்பியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் 2வது முறையாக ஆட்சி அமைப்பதால், பெண்களின் உரிமைகள் கேள்விக்குள்ளாகியுள்ளது. மேலும், ஆப்கானிஸ்தானில் ஜனநாயக ஆட்சிமுறை இருக்காது என தாலிபான்கள் அறிவித்துள்ளதால், மிகக் கடுமையான சர்வாதிகாரம் கட்டவிழ்த்துப்படலாம் என அரசியல் திறனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தான், அதிநவீன ஆயுதங்களுடன் தாலிபான்களின் கமாண்டோ படை செயல்பட்டு வருவது உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சாதாரண குர்தா, தோளில் தொங்கும் ஏகே 47 ரக துப்பாக்கி ஆகியவற்றுடன் வலம் வந்த தாலிபான்களின் சிறப்பு படைப் பிரிவு உலகிற்கு தெரியவந்துள்ளது. குண்டு துளைக்காத கவச உடைகள், இரவிலும் தெளிவாகப் பார்க்கும் கண்ணாடி, அதி நவீன துப்பாக்கிகள், தலைக் கவசம் என அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு நிகராக இவர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த படைப் பிரிவுக்கு 'பத்ரி 313' என பெயரிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
