'எல்லாமே நாடகம்'!.. வஞ்சம் வைத்து பழி தீர்க்கும் தாலிபான்கள்!.. வீடு வீடாக அலைந்து... எதிரிகளை வேட்டையாடும் கொடூரம்!.. நடுங்கவைக்கும் பின்னணி!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Aug 20, 2021 02:09 PM

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள், தாங்கள் பழிவாங்கும் செயலில் ஈடுபடமாட்டோம் என தெரிவித்திருந்தனர். ஆனால், தற்போது ஆப்கனில் அரங்கேறி வரும் சம்பவங்களால் தாலிபான்கள் தங்களின் நிலையிலிருந்து மாறியிருக்க வாய்ப்பில்லை என்ற அச்சமே நிலவுகிறது.

taliban targeted door to door visits usa helpers report

20 வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா தலைமையிலான படையால் ஆட்சி அதிகாரத்திலிருந்து தூக்கி எறியப்பட்ட தாலிபான்கள் தற்போது மீண்டும் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்துள்ளனர்.

இதற்கு முன்பு தாலிபான்கள் அதிகாரத்தில் இருக்கும்போது பல்வேறு கொடுமைகளை நிகழ்த்தியுள்ளனர். பொதுவெளியில் மரணதண்டனை வழங்குவது, பெண்களை பணியிடங்களுக்கு செல்லவிடாமல் தடுத்தது போன்ற பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், தற்போது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பின் அளித்த முதல் செய்தியாளர் சந்திப்பில், "பெண்களின் உரிமைகள் ஷரியா சட்டத்திற்கு உட்பட்டு காக்கப்படும்" என தாலிபானின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.

மேலும் தாலிபான்கள், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தங்களுக்கு எந்த எதிரிகளும் தேவையில்லை என்று தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு படையினரின் முன்னாள் உறுப்பினர்களுக்கும், வெளிநாட்டு படைகளில் பணியாற்றியவர்களுக்கும் மன்னிப்பு வழங்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பல்வேறு வெளிநாட்டு அதிகாரிகளும், ஆப்கானியர்கள் பலரும் சந்தேகத்தில் உள்ளனர்.

இதையடுத்து, ஆப்கானிஸ்தானின் பல்வேறு நகரங்களில் தாலிபானுக்கு எதிரான போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. தலைநகர் காபூலில் ஆப்கானிஸ்தான் கொடியை ஏந்தி பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தான், நேட்டோ (NATO) படைகள் மற்றும் முன்னாள் ஆப்கன் அரசிற்காக பணியாற்றியவர்களை தேடும் பணியில் தாலிபான் ஈடுபட்டுள்ளதாக ஐ.நா எச்சரித்துள்ளது.

வீடு வீடாக சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டு வரும் தாலிபான்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் அச்சுறுத்தி வருகின்றனர் என ஐ.நா தெரிவித்துள்ளது.

இந்த தேடுதல் வேட்டை குறித்து, நார்வேயை சேர்ந்த உலகளாவிய பகுப்பாய்வு மையமான RHIPTO மையம் வெளியிட்டுள்ள ரகசிய அறிக்கையில் தெரியவந்துள்ளது. இந்த மையம் ஐ.நாவிற்கு உளவு செய்திகளை வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

"தாலிபான்களால் பலர் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். அச்சுறுத்தல்கள் தெளிவாக தெரிவிகின்றன" என இந்த அறிக்கையை தயாரித்த குழுவின் தலைவர் கிறிஸ்டியன் நீல்மன் தெரிவித்துள்ளார்.

அவர்கள் தேடும் நபர்கள் கிடைக்காவிட்டால், அவர்களின் குடும்பத்தினர் மீது வழக்கு தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தி தண்டிப்பார்கள். தாலிபான்களின் கருப்பு பட்டியலில் இருக்கும் எந்த ஒரு தனிநபருக்கும் அதிக ஆபத்து உள்ளது. மேலும், கூட்டாக மரண தண்டனைகளும் வழங்கப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகள் தங்கள் நாட்டை சேர்ந்தவர்களை திரும்பி அழைத்துவர தொடர்ந்து முயன்று வருகின்றன. காபூல் விமான நிலையத்திலிருந்து கடந்த ஐந்து நாட்களாக 18 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர் என நேட்டோ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஆயுதப் படைகளுக்கான முன்னாள் மொழிபெயர்ப்பாளர்கள் உட்பட மேலும் 6 ஆயிரம் பேர் தங்கள் நாடுகளுக்கு செல்ல தயாராகவுள்ளனர். இந்த வார இறுதியில் மீட்புப் பணிகளை இரட்டிப்பாக்க வேண்டும் என்பதே இலக்கு என அந்த நேட்டோ அதிகாரி தெரிவித்தார். காபூல் விமான நிலையத்தில் பதற்றமான சூழலே காணப்படுகிறது. ஏனெனில், ஆப்கானிஸ்தாலிருந்து தப்பிக்கும் மக்களை தாலிபான்கள் தடுத்து வருகின்றனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Taliban targeted door to door visits usa helpers report | World News.