இந்தியாவின் ரகசிய ஆவணங்களை தேடி தாலிபான்கள் அட்டூழியம்!.. இந்திய தூதரகங்களின் பூட்டை உடைத்து... எதற்காக இந்த வேட்டை?
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் மூடப்பட்ட இந்திய தூதரகங்களில் புகுந்து தாலிபான்கள் சோதனையிட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தூதரகத்தையும், காந்தஹார், ஹீரட், ஜலாலாபாத், மஷார்-இ-ஷெரீஃப் நகரகங்களில் துணைத் தூதரகங்களையும் இந்தியா இயக்கி வந்தது.
காந்தஹார் மற்றும் ஹெராட் நகரங்களில் உள்ள இந்திய தூதரகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், அங்கு தாலிபான்கள் சோதனையிட்டுள்ளனர். காந்தஹாரில் பூட்டை உடைத்து தாலிபான்கள் தூதரக அலுவலகத்தில் புகுந்ததாகவும், ஆவணங்கள் ஏதேனும் சிக்குகிறதா என தேடியதுடன், அங்கு தூதரக அதிகாரிகள் பயன்பாட்டுக்காக நிறுத்தப்பட்டிருந்த கார்களை எடுத்து சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதைப்போல, ஹெராட் நகரில், இந்திய தூதரக வளாகத்தில் இருந்த கார்களை தாலிபான்கள் எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. காபூலில் உள்ள தூதரகம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஏனெனில், மீட்புப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக காபூல் தூதரகம் திறந்திருக்கும் என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
