'நாங்க நல்லவங்கன்னு CERTIFICATE கொடுத்தீங்க'... 'CNN பெண் செய்தியாளருக்கு நேர்ந்த கதி'... 'கோபத்தில் தாலிபான்கள்'... கேமராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சிகள்!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்கச் செய்தி நிறுவனமான CNN-னின் பெண் செய்தியாளர் மற்றும் அவரது குழுவினர் காபூலில் நடந்த தாக்குதல் சம்பவம் குறித்த பரபரப்பு வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளார்கள்.
ஆப்கானைத் தாலிபான்கள் கைப்பற்றிய நாள் முதல் அங்கிருந்த மொத்த சூழலும் தலைகீழாக மாறியுள்ளது. மக்கள் பலரும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அந்நாட்டு ஊடகங்களின் நிலை முற்றிலும் மாறியுள்ளது.
செய்தி வாசித்த பெண் ஊடகவியலாளர்கள் பணி நீக்கம், பொழுதுபோக்கு சேனல்களில் பாடல்கள், இசை நிகழ்ச்சிகளுக்குத் தடை, அதற்குப் பதிலாக இஸ்லாமியச் சொற்பொழிவு ஒளிபரப்ப உத்தரவு எனப் பல வழிகாட்டு நெறிமுறைகளைத் தாலிபான்கள் வழங்கியுள்ளார்கள்.
இதற்கிடையே ஆப்கானில் பணியாற்றும் சர்வதேச பெண் செய்தியாளர்கள் கட்டாயம் முகத்தை மூடிய படி புர்கா அணி வேண்டும் என்ற கடுமையான உத்தரவு தாலிபான்கள் தரப்பிலிருந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் அமெரிக்கர்கள் மற்றும் ஆப்கானியர்கள் காபூல் விமான நிலையத்திற்குச் செல்லும் வழியில் சந்திக்கும் தடைகள் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற CNN தலைமை சர்வதேச நிருபர் கிளாரிசா வார்டு மற்றும் தயாரிப்பாளர் பிரென்ட் ஸ்வைல்ஸ் மீது தாலிபான்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
CNN குழுவினர் அருகே வந்த தாலிபான் இளைஞர் ஒருவர், கிளாரிசா வார்டிடன் முகத்தை மூடுமாறு எச்சரித்துள்ளார். அப்போது அங்கிருந்த ஆப்கானியர்கள், விமான நிலையத்திற்கு எப்படிச் செல்வது என்பது குறித்து CNN குழுவினரிடம் ஆலோசனை கேட்டுள்ளனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது கூட்டம் கூடியது. இதனால் கடுப்பான தாலிபான் இளைஞர் ஒருவர் துப்பாக்கியைக் காட்டி அங்கிருந்தவர்களைப் பயமுறுத்தியுள்ளார். இதனால் பதறிப்போன CNN செய்தியாளர்கள் உடனே அங்கிருந்து வெளியேற முயன்றுள்ளார்கள். உடனே அங்கிருந்த தாலிபான் இளைஞர்கள் இருவர் செய்தியாளர்களைத் துப்பாக்கியால் தாக்க முயன்றுள்ளார்கள்.
இந்த காட்சிகளை CNN செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. நாங்கள் மிகவும் நல்லவர்கள் சர்வதேச சமூகம் எங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனத் தாலிபான்கள் கூறிய நிலையில், தற்போது செய்தியாளர்களையே அவர்கள் கொடூரமாக மிரட்டியுள்ள சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"Two Taliban fighters just came up with their pistols, and they were ready to pistol whip [our producer who was taking video]. We had to intervene and scream...” pic.twitter.com/3mvCCTlSQR
— Oliver Darcy (@oliverdarcy) August 18, 2021
Here's the moment that @clarissaward and crew were confronted by the Taliban on the streets of Kabul. pic.twitter.com/2ueKYbR8xg
— Oliver Darcy (@oliverdarcy) August 18, 2021