"வாழ்நாளில் ஒரு முறை கூட மது அருந்தியது கிடையாது..." "மது அருந்துபவர்களையும் பிடிக்காது..." 'ட்ரம்ப்' கடைப்பிடிக்கும் தனிப்பட்ட 'பழக்கங்கள்' ...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Feb 24, 2020 07:44 AM

அமெரிக்க அதிபர் டிரம்பின் உணவு பழக்க வழக்கங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Donald Trump has never had alcohol in his lifetime

பொதுவாக காலை உணவு உண்ணும் பழக்கம் இல்லாத ட்ரம்ப், டீ, காஃபி மட்டுமின்றி மது அருந்தும் பழக்கமும் இல்லாதவர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தன் வாழ்க்கையில் ஒரு முறை கூட மது அருந்தியது கிடையாது எனக் கூறும் ட்ரம்ப், தனக்கு மது அருந்துபவர்களையும் பிடிக்காது என்பார். ஒரு முறை அவரது சகோதரருக்கு குடியால் பிரச்னை ஏற்பட்ட போது, குடிப்பதை நிறுத்துமாறு அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. 

மேலும் சிகரெட் பிடிக்கும் பழக்கமோ, வேறு ஏந்த வகையிலான போதைப்பழக்கமோ ட்ரம்புக்கு கிடையாது எனக் கூறப்படுகிறது.

மது அருந்தும் பழக்கமில்லாத ட்ரம்ப், டயட் கோக்கை விரும்பி அருந்துவார். ஒரு நாளில் ட்ரம்ப் 12 டயட் கோக் பாட்டில்களை கூட பருகுவார் என தகவல்கள் உண்டு.

வெண்பன்றி இறைச்சியை முட்டையுடன் கலந்து சாப்பிடும் பழக்கம் கொண்ட ட்ரம்ப் ஒரு பீட்சா ரசிகர், அதை அவர் விரும்பி சாப்பிடுவார் எனக் கூறப்படுகிறது. 

மேலும், சாக்லேட் மில்க் ஷேக், கடல் உணவுகள், உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆகியவையும் ட்ரம்பின் விருப்பப்பட்டியலில் உள்ள உணவுகளாகும்.

Tags : #DONALD TRUMP #AMERICA #AMERICAN PRESIDENT #FOOD MENU #NEVER HAD ALCOHOL