'இந்தியாவில் ஒவ்வொரு நாளும் இத்தனை பாலியல் குற்றங்களா'?... 'அதிலும் இவர்கள் தான் முக்கிய காரணமா'?... அதிரவைக்கும் புள்ளி விவரம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Sep 30, 2020 04:05 PM

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் 7% உயர்ந்துள்ளதாகத் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ள தகவல் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

India recorded an average of 87 rape cases daily in 2019

உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸில் இளம்பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஆன்மாவையே உலுக்கியுள்ள இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை  பலர் தெரிவித்துள்ள நிலையில், இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டதா எனப் பலரும் கேள்வி எழுப்பியுள்ளார்கள். இந்நிலையில் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த 2019-ம் ஆண்டில் நாளொன்றுக்கு சராசரியாக 87 பாலியல் வன்கொடுமை புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால் கடந்த ஆண்டில் மட்டும் 4 லட்சத்து 5 ஆயிரத்து 861 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையானது கடந்த 2018ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7 சதவீதம் அதிகமாகும்.

India recorded an average of 87 rape cases daily in 2019

அதேநேரத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பெரும்பாலான குற்றங்கள் கணவர் மற்றும் உறவினர்கள் மூலமாகவே அரங்கேறுவதாகத் தேசிய குற்ற ஆவணக் காப்பக தரவுகள் தெரிவிக்கின்றன. அதேபோன்று குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களும் 4.5% அதிகரித்துள்ளது வேதனையின் உச்சம்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. India recorded an average of 87 rape cases daily in 2019 | India News.