'நாங்க பேஸ்புக்ல நல்ல பிரண்ட்ஸ்'... 'எங்களுக்குள்ள வேற ஒண்ணும் இல்ல'... 3 மாதம் கழித்து நடந்த அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > இந்தியாமுகநூலில் நண்பர்களாகப் பழகிய பெண்ணுக்கு மூன்று மாதம் கழித்து வீட்டிலேயே குழந்தை பிறந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![Youth sexually assaults girl, impregnates her after befriending her on Youth sexually assaults girl, impregnates her after befriending her on](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/youth-sexually-assaults-girl-impregnates-her-after-befriending-her-on.jpg)
மகாராஷ்டிர மாநிலம் மும்பை பகுதியில் வசித்து வரும் இளைஞர் ஒருவருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் முகநூல் மூலம் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நண்பர்களாகப் பழகிய நிலையில், ஒரு கட்டத்தில் இருவரும் சந்திக்க முடிவு செய்து நேரில் சந்தித்துப் பேசிக் கொண்டார்கள். நாட்கள் செல்ல செல்ல அடிக்கடி நேரில் சந்தித்துப் பேசுவதை இருவரும் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் இளைஞரின் வீட்டில் யாரும் இல்லாத நிலையில், இன்று நாம் இருவரும் எனது வீட்டில் சந்தித்துப் பேசலாம் என அந்த இளைஞர் அழைத்துள்ளார். இரண்டு வருடங்களாக அந்த இளைஞரைத் தெரியும், அவரும் நல்ல நண்பர் தானே என்ற எண்ணத்தில் அந்த இளம்பெண்ணும் இளைஞரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். இளம்பெண் வீட்டிற்கு வந்ததைச் சாதகமாகப் பயன்படுத்திய அந்த இளைஞர், வீட்டில் வைத்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதற்கிடையே இந்த சம்பவம் நடந்து 3 மாதம் கழித்துத் தான், கர்ப்பமானதை இளம்பெண் உணர்ந்துள்ளார். மேலும் கடந்த செப்டம்பர் மாதம் பிரசவ பரிசோதனைக்காக இளம்பெண் நர்சிங் கோமிற்கு வந்துள்ளார். பின்னர் வீட்டிலிருந்த நிலையில் அந்த இளம்பெண்ணிற்கு அங்கேயே ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதையடுத்து நர்சிங் கோம் அளித்த தகவலின் அடிப்படையில் அந்த இளைஞரை போலீசார் கைது செய்தார்கள்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)