‘அடுத்தடுத்து’ வந்த வாகனங்களால்... ‘நொடிப்பொழுதில்’ நடந்த ‘கோர’ விபத்தில்... ‘5 பேர்’ பலி; ‘60 பேர்’ படுகாயம்...
முகப்பு > செய்திகள் > உலகம்By Saranya | Jan 06, 2020 09:36 AM
மலைப்பகுதியில் அடுத்தடுத்து வந்த வாகனங்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியில் உள்ள பிளஸண்ட் மவுண்ட் என்ற மலைப்பகுதியை ஒட்டியுள்ள நெடுஞ்சாலையில் வாகனங்கள் சென்றுகொண்டிருந்துள்ளன. அப்போது பெரிய வாகனம் ஒன்று மலைப்பாதையில் கீழே இறங்க, பின்னால் வந்த கார் ஒன்று அதை முந்த முயன்றபோது அந்த 2 வாகனங்களும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து விபத்துக்குள்ளான 2 வாகனங்களும் நிறுத்தப்பட, அடுத்தடுத்து பின்னால் வந்த வாகனங்களும் அவற்றின்மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் படுகாயமடைந்த 60க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Tags : #FIREACCIDENT #US #PENNSYLVANIA #TURNPIKE #CRASH
