'தூக்கத்தில் பாதியில் எழும்பி கதறி கதறி அழுகை'... 'ஐயோ, கனவில் நடந்த சம்பவம்'... 'உடனே ஹாஸ்பிடல் ஓடிய பெண்'... எப்படிங்க உங்களுக்கு தெரியும், நெஞ்சை பிடித்து கொண்டு உட்கார்ந்த டாக்டர்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Sep 30, 2021 07:59 PM

தூங்கும்போது கனவில் கண்ட காட்சி பலிக்குமா, பலிக்காதா என்பது குறித்து அவ்வப்போது பலரும் பேசிக் கொள்வது வழக்கம். ஆனால் பெண் ஒருவர் கண்ட கோரக் கனவு அவரது வாழ்க்கையையே புரட்டிப் போட்டுள்ளது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது.

UK Mother’s dream led to her four-year-old daughter’s cancer Diagnosis

இங்கிலாந்தில் Crawley என்ற பகுதியில் Laks Rana என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவர் இரவில் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென திடுக்கிட்டு எழுந்து கதறி அழுதுள்ளார். ஆனால் வீட்டில் இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அவர்கள் என்ன நடந்தது எனக் கேட்க, நான் மோசமான ஒரு கனவைக் கண்டேன்.

UK Mother’s dream led to her four-year-old daughter’s cancer Diagnosis

அதனால் தான் அழுகிறேன் எனக் கூறியுள்ளார். உடனே குடும்பத்தினர் இது கனவு தானே பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என் ஆறுதல் கூறியுள்ளார்கள். ஆனாலும் Laks Ranaவின் மனது ஏற்றுக் கொள்ளவில்லை. அன்று இரவு அவருக்குத் தூக்கமும் வரவில்லை. அடுத்த நாள் காலை விடிந்த உடன் தனது இரு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு Laks Rana மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

அங்குத் தனது பிள்ளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யுமாறு மருத்துவரிடம் Laks Rana கூறியுள்ளார். அவரும் குழந்தைகள் நல்லா தானே இருக்கிறார்கள் எதற்கு மருத்துவ பரிசோதனை எனக் கேட்டுள்ளார். ஆனால் Laks Rana மருத்துவ பரிசோதனை செய்வதில் உறுதியாக இருந்ததையடுத்து, அவரது மகனான Amritக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் உடலில் எந்த பிரச்சனையும் இல்லை என்று ரிப்போர்ட் வந்தது.

UK Mother’s dream led to her four-year-old daughter’s cancer Diagnosis

பின்னர் இரண்டாவது மகளான Anayaவுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது சிறுமியின் காலில் ஒரு காயம் இருப்பதை மருத்துவர் கவனிக்க, மருத்துவ பரிசோதனை முடிவு தான் மொத்த குடும்பத்தையும் புரட்டிப் போட்டது. பரிசோதனையில் Anayaவுக்கு 'Acute Lymphoblastic Leukaemia' என்ற கொடிய புற்று நோய் இருப்பது தெரிய வந்தது.

இது ரத்தத்தில் உள்ள செல்களை அழித்து, ரத்தம் மற்றும் எலும்புகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனிடையே ஏதோ ஒரு சம்பவம் நடந்துள்ளது, அதனால் தான் Laks Rana தனது பிள்ளைகளை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வந்துள்ளார் என்பதைப் புரிந்துகொண்ட மருத்துவர் என்ன நடந்தது எனக் கேட்டுள்ளார்.

UK Mother’s dream led to her four-year-old daughter’s cancer Diagnosis

அப்போது Laks Rana கூறிய சம்பவத்தைக் கேட்ட மருத்துவருக்கே 'BP' எகிறிவிட்டது. முன்னதாக Laks Rana தூக்கத்தில் கண்ட கனவில், தனது பிள்ளைகளுக்கு இறுதிச் சடங்கு செய்வது போலக் கனவு வந்துள்ளது. அது கனவு என்றாலும் Laks Ranaயின் உள்ளுணர்வு ஏதோ சொல்லிக் கொண்டே இருந்துள்ளது. இதனால் தான் அவர் தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு மருத்துவ பரிசோதனைக்கு வந்துள்ளார்.

ஒரு அம்மா தான் தனது குழந்தைகளுக்கு என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் Laks Rana தனது கனவில் வந்த சம்பவத்தைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் மருத்துவமனைக்கு வந்ததால் தான் தனது குழந்தைக்கு இருக்கும் கொடிய நோயைக் கண்டுபிடிக்க முடிந்தது.

UK Mother’s dream led to her four-year-old daughter’s cancer Diagnosis

உண்மையிலேயே இது கடவுளின் செயலா அல்லது ஒரு தாய்க்குத் தனது குழந்தைகள் மீதுள்ள பாசத்தால் இந்த பிரபஞ்சமே குழந்தைக்கு வரப்போகும் ஆபத்தைக் காட்டிக் கொடுத்துள்ளதா என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், 'தாயிற் சிறந்ததோர் கோயிலும் இல்லை' என்பதை நிரூபித்துள்ளார் Laks Rana.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. UK Mother’s dream led to her four-year-old daughter’s cancer Diagnosis | World News.