90 நாட்களுக்கு மேல் தொடர்ந்த மாதவிடாய்!.. சுருண்டு விழும் அளவுக்க சோர்வு!.. இளம்பெண்ணுக்கு ஸ்கேன் ரிப்போர்ட்டில் காத்திருந்த அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > உலகம்லண்டனை சேர்ந்த இளம்பெண்ணுக்கு 90 நாட்களுக்கு மேல் மாதவிடாய் தொடர்ந்த நிலையில் மருத்துவ பரிசோதனையில் அதிர்ச்சிக்குரிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
Bansri Dhokia (30) என்ற இளம்பெண்ணுக்கு 90 நாட்களுக்கு மேல் மாதவிடாய் தொடர்ந்திருக்கிறது. அதன் காரணமாக சோரவாக உணர்ந்ததோடு, அவருக்கு அடிக்கடி மூச்சுத்திணறலும் ஏற்பட்டிருக்கிறது.
தான் பிசியாக பணியில் இருந்த காரணத்தால் தான் இப்படி ஆகிறது என முதலில் நினைத்து கொண்டிருந்த அவர், பின்னர் ரத்த பரிசோதனை செய்து பார்த்துள்ளார். அதில் அவருக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்ற முடிவு வந்தது.
எனினும், உபாதைகள் நீங்காத காரணத்தால், அவர் அடுத்தக்கட்ட பரிசோதனைகளை செய்துள்ளார். அப்போது வந்த முடிவுகள் அவருக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. ஏனெனில் Bansri, lymphoblastic leukaemia என்ற அரியவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
அந்த சமயத்தில் அவரின் உடல் மிகவும் பலவீனமாக இருந்ததால் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது தொடர் சிகிச்சையின் மூலம் நோயிலிருந்து Bansri மீண்டு வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "தொடக்கத்தில் ஏதோ என்னிடம் பிரச்சினை இருக்கும் என நினைத்தேன். ஆனால் இவ்வளவு பெரிய பிரச்சினையாக இருக்கும் என கருதவில்லை. தொடக்கத்தில் 12 மணி நேரம் தூங்கினாலும் உடல் மிகவும் சோர்வாக இருக்கும்.
ராயல் லண்டன் மருத்துவமனையில் புற்றுநோய்க்கான சிகிச்சையை எடுத்து வருகிறேன். என் வாழ்வை நினைத்து எனக்கு பயம் வந்துவிட்டது. எனக்கு ஏன் இப்படி ஆனது என என்னையே நொந்து கொண்டேன். சிகிச்சையை தொடர்ந்து எடுத்த நிலையில் நோயிலிருந்து மீண்டுள்ளேன்.
உங்கள் மாதவிடாயில் எதாவது பெரிய மாற்றம் நிகழ்ந்தாலோ அல்லது உடல்நிலையில் பிரச்சினை இருந்தாலோ அலட்சியப்படுத்தாதீர்கள் என கூறியுள்ளார்.
ஆனால், leukaemia தீவிரமான பிரச்சினை என்பதால் அது மீண்டும் வரும் அபாயத்தைக் குறைக்க ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய பன்ஸ்ரிக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, அந்த சிகிச்சையும் அவருக்கு செய்யப்பட்டது.
அவருக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படலாம் என்ற நிலையில் தொடர்ந்து நோயில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறார்.