‘மனைவியை எப்படியாவது காப்பாத்தணும்’!.. 17 வருசம் உலகம் முழுவதும் சுற்றிய கணவர்.. மனதை உருக்கிய கதை..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபுற்றுநோயால் பாதிப்படைந்த தன் மனைவியின் சிகிச்சைக்காக 17 ஆண்டுகளாக முதியவர் ஒருவர் வயலின் வாசித்து நிதி திரட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவை சேர்ந்தவர் வயலின் கலைஞரான் ஸ்வப்பன் செட் (77). இவரது மனைவிக்கு, கடந்த 2002-ம் ஆண்டு கர்ப்பப்பையில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து உடனடியாக மனைவியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஆனால் சிகிச்சைக்கு அதிகமாக செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் என்னசெய்வதென்று தெரியாமல் ஸ்வப்பன் சேட் தவித்துள்ளார்.
இதனை அடுத்து தனது தெரிந்த வயலின் வாசிக்கும் திறமையை வைத்து பணம் திரட்ட ஸ்வப்பன் சேட் முடிவெடுத்துள்ளார். அதன்படி கடந்த 17 ஆண்டுகள் உலகின் பல்வேறு இடங்களுக்கு சென்று, வயலின் வாசித்து நிதி திரட்டியுள்ளார். அதில் சேர்ந்த பணத்தை கொண்டு கடந்த 2019-ம் ஆண்டு ஸ்வப்பன் சேட்டின் மனைவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பின் அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மனைவியின் உயிரை காப்பாற்ற, 17 ஆண்டுகளாக உலகம் முழுவதும் வயலின் வாசித்து நிதி திரட்டிய ஸ்வப்பன் சேட் குறித்து, ட்ருஷா என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.