'இவருடைய இறுதி சடங்கிற்கு இவரையே அனுமதிக்கவில்லை'... 'ரொம்ப குழப்பமா இருக்கா?'... 'ஆனா அது தான் உண்மை'... வேடிக்கையான பின்னணி!
முகப்பு > செய்திகள் > உலகம்தலைப்பைப் பார்க்கும் போதே ஆச்சரியமாக இருக்கிறதா, ஆனால் அது தான் உண்மை.

ட்ரினிடாட் நாட்டை சேர்ந்த இளைஞர் che lewis. 29 வயதான இந்த இளைஞர் தற்போது உயிருடன் இல்லை. ஆனால் அவர் இறந்த பின்பு நடந்த வேடிக்கையான பல விஷயங்கள் தான் தற்போது இணையத்தில் பரவலாகப் பேசப்படுகிறது. மரணமடைந்த che lewisக்கு 'Extreme Embalming' செய்யப்பட்டது. அதாவது இறந்தவர் எந்த நிலையில் இருக்க வேண்டுமோ, அந்த நிலையில் அவரை உட்காரவோ, படுக்கவோ வைத்து விட்டு அவரது உடலுக்குள் ஒருவித ரசாயனத்தைச் செலுத்துவார்கள். அந்த ரசாயனம் இறுகி அவரது உடலையும் இறுக்கமாக வைத்துக் கொள்ளும்.
அந்த முறையில் தான் che lewisயின் உடலும் பதப்படுத்தப்பட்டது. அவர் உயிருடன் இருப்பது போல அவரை தத்ரூபமாக உட்கார வைத்து அவருக்கு கோட், சூட் அணிவித்து அவரை இறுதிச் சடங்கிற்குக் கொண்டு சென்றார்கள். தேவாலயத்திற்கு che lewis அழைத்து செல்லப்பட்ட நிலையில் அங்கு அவர் நாற்காலியில் உட்காரவைக்கப்பட்டிருந்தார். அப்போது che lewis இறுதிச் சடங்கிற்கு வந்தவர் என எண்ணிய சிலர் அவரிடமே சென்று ஏன் மாஸ்க் போடாமல் வந்துள்ளீர்கள் எனக் கேட்ட வேடிக்கையான சம்பவமும் அரங்கேறியது.
இந்நிலையில் che lewisயின் இறுதிச் சடங்கினை நடத்த அவரது உடலை தேவாலையத்திற்குள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. அதற்கு அவரது குடும்பத்தினர் செய்த இதுபோன்ற குழப்பமான விஷயங்கள் தான். இறந்தவரை இப்படி எல்லாம் நடத்துவது தவறு, இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனப் பாதிரியார்கள் கூறிவிட்டார்கள். அதே போன்று இறந்தவரின் உடலை இதுபோன்று ஆபத்தான முறையில் கொண்டு செல்வது குற்றம் என போலீசாரும் மறுபக்கம் விசாரணையைத் துவங்கி விட்டார்கள்.
இதற்கிடையே பார்ப்பதற்கு உயிருடன் இருப்பது போல கம்பீரமாக che lewis இருந்த போதும், இறுதிச் சடங்கில் அவர் பட்ட பாடுகள் தான் மிகவும் மோசம், என அந்த பகுதி மக்கள் வேதனையுடன் கூறியுள்ளார்கள்.

மற்ற செய்திகள்
