இறப்பு சான்றிதழே கொடுத்தாச்சு!.. தகனம் செய்ய தயாரான மகள்!.. கடைசியி நொடியில் ‘நடந்த’ அந்த ‘வியக்க வைக்கும்’ சம்பவம்! ஆச்சரியத்தில் உறைந்த உறவினர்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Behindwoods News Bureau | Jan 29, 2021 06:17 PM

பெற்ற தாயின் உடலை தகனம் செய்வதற்கு சற்று நேரத்துக்கு முன்பு அவர் உயிரோடு இருப்பதை மகள் கண்டுபிடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

daughter found her mother alive just few mins before cremation

திரைப்படங்களில் வருவது போல நடந்த இந்த சம்பவம் அர்ஜென்டினாவில் நடந்திருக்கிறது. அர்ஜென்டினா நாட்டில் ரெஸிஸ்டென்சியா பகுதியில் பகுதியில் வசித்து வந்த 89 வயது மூதாட்டி நெஞ்சுவலி காரணமாக ஜனவரி மாதம் இறுதி வாரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை அந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். மருத்துவர்களும் மூதாட்டியின் உடல் நிலைக்கு ஏற்ப சிகிச்சை அளித்து வந்த நிலையில் உரிய சிகிச்சை அளித்தும் பலனின்றி மூதாட்டிக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். பின்னர் மூதாட்டியின் மகளிடம் மூதாட்டி இருந்ததற்கான இறப்புச் சான்றிதழை வழங்கியுள்ளனர். இதற்கு அடுத்த நாள் மூதாட்டிக்கு இறுதிச் சடங்குகளை அவருடைய மகள் ஏற்பாடு செய்தார்.

இதற்கென வெலஸ் சர்ஸ்ஃபீல்டு பகுதியில் இருக்கிற தகன மேடைக்கு மூதாட்டியின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அவருக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. அவரின் உறவினர்கள் இறுதிச் சடங்குகளை செய்து கொண்டிருந்தபோது தமது தாய் உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகளை அவருடைய மகள் கண்டுபிடித்திருக்கிறார்.

ALSO READ: ‘இனி ஈஸியா சார்ஜ் பண்லாம்!’... இது நம்ம List-லயே இல்லயே?.. டிஜிட்டல் சந்தையில் ‘ஜியோமி அறிமுகப் படுத்திய’ வாயைப் பிளக்க வைக்கும் தொழில்நுட்பம்!

உடனே இதுபற்றி உறவினர்களிடம் கூற, உறவினர்கள் இறுதிச் சடங்கினை உடனடியாக நிறுத்தி மூதாட்டியை இன்னொரு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று அவசர பிரிவில் அனுமதித்தனர். அதன்பின்னர் மூதாட்டியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூதாட்டி உயிருடன் இருப்பதை உறுதி செய்து சிகிச்சையை தொடர்ந்தனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Daughter found her mother alive just few mins before cremation | World News.