‘புவனேஷ்வர்குமார் வீட்டில் ஏற்பட்ட எதிர்பாராத இழப்பு’!.. சோகத்தில் கிரிக்கெட் உலகம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாரின் தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரின் தந்தை கிரண் பால் சிங் (63), உத்தரப்பிரதேச காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த நிலையில் அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் மீரட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இதனை அடுத்து மேல் சிகிச்சைக்காக முசாபர் நகரில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு கிரண் பால் சிங் அனுப்பப்பட்டார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று கிரண் பால் சிங் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் புவனேஷ்வர் குமார் விளையாடிக் கொண்டிருந்தபோதே அவரது தந்தைக்கு உடல் நிலை மோசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் புவனேஷ்வர் குமாருக்கு, சக கிரிக்கெட் வீரர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் பியூஸ் சாவ்லாவின் தந்தை கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இதனை அடுத்து இந்திய அணியின் முன்னாள் வீரரும், தோனியின் நண்பருமான ஆர்.பி. சிங்கின் தந்தையும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அதேபோல் இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தியின் தாய் மற்றும் அக்கா ஆகிய இருவரும் கொரோனாவால் உயிரிழந்தனர். இப்படி அடுத்தடுத்து கிரிக்கெட் வீரர்களின் சொந்தங்கள் மரணமடைந்து வருவது, கிரிக்கெட் உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
