'என் மனைவியோட கனவுல வர விலங்குகள...' 'வாங்கி கொடுக்றது தான் என் மொத வேலை...' 'இப்போ யானை...' - மனைவியின் கனவுகளுக்காகவே வாழும் அதிசய கணவன்...
முகப்பு > செய்திகள் > இந்தியாதன் மனைவியின் கனவில் வரும் மிருகங்களை எல்லாம் வாங்கி, மனைவிக்கே பரிசளிக்கும் விசித்திர வழக்கத்தை கொண்டுள்ளார் லால்மொநிர்ஹத் பகுதியைச் சேர்ந்தவர் துலால் சந்திர ராய்.

வங்கதேசத்தின் பஞ்சாக்ரம் யூனியன் பிரதேசம் லால்மொநிர்ஹத் பகுதியில் விவசாயம் செய்து வரும் சந்திர ராயின் மனைவி தான் திருமதி துளசி ராணி தசி.
துளசி ராணி அவர்களின் கனவில் சில நேரங்களில் மிருகங்களும் வருமாம். இதுகுறித்து தன் கணவரிடம் பகிர்ந்து கொண்டால், சந்திர ராயும் தன் மனைபியின் கனவில் வந்த மிருகத்தை கண்முன்னே கொண்டு வந்து விடுவாராம். இதுவரை மனைவியின் கனவில் வந்த குதிரை, அன்னம் மற்றும் ஆடு போன்றவற்றை வாங்கியுள்ளார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பாக துளசி அவர்களின் கனவில் யானை வந்துள்ளது. என்ன தான் அதிக செலவு என்றாலும் தன் மனைவியின் ஆசைக்கு இணங்க தற்போது சந்திரா அவர்கள் யானையையும் வாங்கி கொடுத்துள்ளார்.
மேலும் யானை வாங்க போதிய காசு இல்லாததால், சந்திர ராய் தன்னிடமிருந்த இரண்டு பிகா அளவுள்ள நிலத்தை விற்று பணத்தினைத் திரட்டிக் கொண்டு, மிருகங்கள் விற்பனை செய்யப்படும் மவுல்வி பசார் என்னும் இடத்திற்குச் சென்று மிகுந்த விலை கொடுத்து யானை ஒன்றை வாங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யானை மட்டுமில்லாமல் யானையை கவனிக்க, இப்ராஹிம் மியா என்னும் யானைப் பாகனையும் சம்பளம் கொடுத்து யானைப் பராமரிப்புக்கு அழைத்து வந்துள்ளார்.
இதனை அறிந்த ஊர் மக்கள் சந்திரா அவர்கள் தன் மனைவிக்கு காட்டும் அன்பை கண்டும், அவர் கொண்டு வந்த யானையைக் காணவும் தம்பதிகளின் வீட்டிற்கு வந்த வண்ணம் உள்ளனர். அதுமட்டுமில்லாமல் சந்திரா, துளசி தம்பதிகள் அந்த கிராமத்திலேயே மிகவும் புகழ் பெற்ற தம்பதிகளாக பார்க்கப்படுகின்றனர்.

மற்ற செய்திகள்
