‘கொரோனா ரூல்ஸை மீறிட்டீங்க’!.. இந்த விமானம் மட்டும் UAE வர தடை.. வெளியான அதிரடி அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக முன்னணி விமான நிறுவனத்தின் விமானங்கள் ஐக்கிய அரபு அமீரகம் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்று காரணமாக சர்வதேச பயணிகளுக்கு அனைத்து நாடுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவியபோது அமெரிக்கா, நியூஸிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் இந்திய பயணிகள் வர தடை விதித்திருந்தன.
தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதனால் இந்தியாவுடனான சர்வதேச போக்குவரத்து சேவைக்கான தடையில் பல நாடுகள் தளர்வுகளை அறிவித்து வருகின்றன.
அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகமும், இந்திய பயணிகள் தங்கள் நாட்டுக்கு வருவதற்கு அனுமதி அளித்தது. ஆனால் பயணிகள் அங்கு வரும் முன் ஆர்டி-பிசிஆர் (RT-PCR) பரிசோதனை செய்திருக்க வேண்டும் என அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இந்தியாவில் இருந்து சென்ற இண்டிகோ விமானத்தில் பயணித்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்யாமல் சென்றதாக புகார் எழுந்துள்ளது. அதனால் வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி வரை இண்டிகோ விமானங்கள் ஐக்கிய அரபு அமீரகத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டுக்கு செல்வதற்காக இண்டிகோ விமானத்தில் பயணச்சீட்டு முன்பதிவு செய்தவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மற்ற செய்திகள்
