‘ரெட் லிஸ்ட்டில் இந்தியா உட்பட 13 நாடுகள்’.. இந்த நாடுகளுக்கு போனது தெரிஞ்சா அபராதம்.. அதிரடியாக அறிவித்த நாடு..!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்தியா உட்பட 13 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு திரும்பினால் 3 ஆண்டுகள் பயண தடை விதிக்கப்படும் என சவுதி அரேபியா எச்சரிக்கை செய்துள்ளது.
![Saudi to impose 3-year travel ban for these countries Saudi to impose 3-year travel ban for these countries](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/saudi-to-impose-3-year-travel-ban-for-these-countries.jpg)
கொரோனா அச்சுறுத்தலால் பல நாடுகள் தங்களுடைய சர்வதேச விமான சேவைக்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளன. சரக்கு விமானம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான விமான போக்குவரத்து தவிர பயணிகள் விமானங்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் கொரோனா பாதிப்புகள் அதிகளவில் காணப்படும் நாடுகளில் இருந்து வருவோர், கொரோனா தடுப்பூசி செலுத்திய விவரம் மற்றும் கொரோனா பாதிப்பில்லா சான்றிதழ் ஆகியவற்றை உடன் கொண்டு வருவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சவுதி அரேபிய அரசு கொரோனா பாதிப்புகள் அதிகளவிலுள்ள நாடுகளை ‘ரெட் லிஸ்ட்’ என்று பட்டியலிட்டுள்ளது. அதில் ஆப்கானிஸ்தான், அர்ஜென்டினா, பிரேசில், எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, லெபனான், பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, துருக்கி, வியட்நாம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 13 நாடுகள் இடம் பெற்றுள்ளன.
இந்த நிலையில் ரெட் லிஸ்ட் பட்டியலில் உள்ள நாடுகளுக்கு தங்கள் நாட்டு குடிமக்கள் பயணம் மேற்கொள்ள சவுதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறி பயணம் மேற்கொண்டால் அவர்களுக்கு 3 ஆண்டுகள் பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் மக்கள் யாரேனும் இந்த குறிப்பிட்ட நாடுகளுக்கு சென்று திரும்பி இருப்பது தெரியவந்தால், அவர்களுக்கு அதிக அளவிலான அபராதமும் விதிக்கப்படும் என்று சவுதி அரேபியா அரசு எச்சரிக்கை செய்துள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)