தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு!.. புதிய தளர்வுகள் அறிவிப்பு!.. என்னென்ன இயங்கும்?.. எவற்றுக்கு தடை?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாட்டில் கொரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை மேலும் ஒரு வார காலம் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா 2வது அலை காரணமாக கடந்த மே 10ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் விளைவாக தொற்றின் தாக்கம் சற்று குறையத் தொடங்கியுள்ளது. அதையடுத்து, தற்போது முழு ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
தளர்வுகளுடன் கூடிய இந்த ஊரடங்கு வரும் ஜூன் 21 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் கூடுதலாக அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள், வீடு பராமரிப்பு சேவைகள் போன்றவை இ-பதிவுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதோடு, டாஸ்மாக் மதுக்கடைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் காலை 10 முதல் மாலை 5 வரை டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு அனுமதி.
அழகு நிலையங்கள், சலூன்கள் குளிர்சாதன வசதியின்றி காலை 6 முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளித்துள்ளது.
பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
பேருந்து போக்குவரத்துக்கு தடை நீடிக்கிறது.