எத்தனை உருமாற்ற கொரோனா இன்னும் வரப்போகுது?.. எவ்வளவு அடிச்சாலும் தாங்குற மாதிரி... சர்வ வல்லமை பொருந்திய தடுப்பூசி வந்தாச்சு!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையிலும், வைரஸ் கிருமியானது உருமாற்றம் அடைந்து கொண்டே வருவதால், மருத்துவ உலகம் திணறி வருகிறது. இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சம்பவம் தற்போது நடந்துள்ளது.

வைரஸின் பரவும் வேகம், பாதிப்பின் தீவிரத்தால் டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் கொரோனா வகைகள் உலக அளவில் கவலைக்குரியவையாக மாறியுள்ளன. இந்நிலையில், அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், சூப்பர் வேக்சின் என்று குறிப்பிடப்படும் ஹைபிரிட் தடுப்பு மருந்து ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
கொரோனா வைரசின் ஆபத்தான அமைப்பான ஸ்பைக் புரதத்தின் பல்வேறு வகைகளுக்கு எதிராக, ஆன்ட்டிபாடிகளை இந்த தடுப்பு மருந்து உருவாக்குவது, எலிகள் மீதான பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய்த்தொற்று ஏற்படாமல் தடுப்பதோடு, நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதையும் தடுப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 நோய்த்தொற்றை உருவாக்கும் கொரோனா வைரஸ்கள் மட்டுமின்றி, விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய வாய்ப்பு உள்ள பிற கொரோனா வைரஸ்களுக்கு எதிராகவும் தடுப்பாற்றலை ஏற்படுத்தும் வகையில், தடுப்பு மருந்து வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தடுப்பு மருந்து அடுத்த ஆண்டில் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட உள்ளது.

மற்ற செய்திகள்
