'ஐபிஎல்' பற்றி வெளியான அசத்தல் 'அப்டேட்'.. "இனி இருக்குற 'மேட்ச்' எல்லாம் நடத்த இதான் நல்ல 'ஐடியா'.." 'பிசிசிஐ' அதிகாரி சொன்ன 'மாஸ்' தகவல்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு14 ஆவது ஐபிஎல் சீசன், கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி முதல், இந்தியாவில் ஆரம்பமாகி நடைபெற்று வந்த நிலையில், திடீரென பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இந்தியாவில், மிகவும் பாதுகாப்பாக ஐபிஎல் தொடர் நடைபெற்று வந்த போதிலும், கொல்கத்தா, சென்னை, டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், போட்டிகள் அனைத்தும் பாதியிலேயே கை விடப்பட்டது.
மீதமுள்ள போட்டிகளை, நடத்தியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் பிசிசிஐ உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணிக்கு, செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி வரை இங்கிலாந்தில் டெஸ்ட் தொடர் உள்ளது. அதே போல, அக்டோபர் மாதத்தில் டி 20 உலக கோப்பை தொடரும் ஆரம்பமாகும் என கூறப்படுகிறது. எனவே, அதற்கு முன்பாக மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்தி விட வேண்டும் என்றும், பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.
மேலும், இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளதால், வேறு நாடுகளில் ஐபிஎல் போட்டிகளை நடத்தவும் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை ஆகிய கிரிக்கெட் வாரியங்கள் ஐபிஎல் தொடரை நடத்தவும் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிசிசிஐயின் தலைமை நிர்வாக அதிகாரியும், ஐபிஎல் தொடரின் தலைமை செயல் அதிகாரியுமான ஹேமங் அமின் (Hemang Amin), ஐபிஎல் தொடரை நடத்துவதற்காக 2 திட்டங்களை வகுத்துள்ளார்.
மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை இங்கிலாந்தில் நடத்துவதில் இருக்கும் சிரமத்தை ஹேமங் அமின் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர், செப்டம்பர் பாதியில் முடிவடைகிறது. அதன் பிறகு, ஐபிஎல் போட்டிகளை இங்கிலாந்தில் நடத்தலாம். ஆனால், அந்த சமயத்தில் இங்கிலாந்தில் மழைக் காலமாக இருக்கும். எனவே, போட்டிகள் தடைபட கூட வாய்ப்புள்ளது.
அது மட்டுமில்லாமல், இங்கிலாந்தில் ஐபிஎல் நடத்த அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆனால், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாத கடைசியில், வெயில் குறைந்து நல்ல சூழல் உருவாகும். அதே போல, கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முழுவதையும், அதன் முன்பு 2014 ஆம் ஆண்டில் சில ஐபிஎல் போட்டிகளையும், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்திய அனுபவமும் உள்ளதால், ஐக்கிய அரபு அமீரகம் தான் சிறந்த தேர்வாக இருக்கும் என ஹேமங் அமின், சில முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் எங்கு மற்றும் எப்போது நடத்த வேண்டும் என்பது பற்றி, மே மாதம் 29 ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதி மீட்டிங்கில் முடிவு எடுக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
