'இன்னொருத்தரோட கிட்னிய பொருத்துறது பாதுகாப்பு இல்ல...' 'இவருக்கு இப்படி பண்றது தான் நல்லது...' - மொத்தம் 11 மணி நேரம் நடந்த ஆப்பரேஷன்...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஐக்கிய அரபு நாட்டைச் சேர்ந்த 60 வயதாகும் அலி ஷம்சி பிறக்கும் போதே ஒரே சிறுநீரகத்துடன் பிறந்தவர்.
![the man used his own kidney transplant surgery in the uae the man used his own kidney transplant surgery in the uae](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/the-man-used-his-own-kidney-transplant-surgery-in-the-uae.jpg)
இந்நிலையில் ஷம்சிக்கு சிறுநீரகத்தில் புற்றுநோய் கட்டி ஏற்பட்டுள்ளதையடுத்து, அவரை குறித்து மருத்துவக்குழு சோதனை நடத்தி வந்துள்ளது. அதன்பின் மருத்துவ நிபுணர்கள் அறுவை சிகிச்சை செய்து, கட்டி வந்த சிறுநீரகத்தை துண்டித்து வெளியே எடுத்து, அதை உடல் உறுப்புகளை பாதுகாக்கும் திரவத்தில் வைத்தனர்.
அதன்பின் சிறுநீரகத்தில் இருந்த கட்டியை, மற்ற நல்ல செல்களுக்கு சேதாரம் ஏற்படாமல் மிகச் சிறப்பாக அகற்றிய மருத்துவர்கள், கட்டி அகற்றப்பட்ட இடத்தை தையல் போட்டு, அதனை பழையபடி சிறுநீரகமாக வடிவமைத்தனர்.
இதுகுறித்து கூறிய மருத்துவர்கள், 'ஷம்சியின் சிறுநீரகத்தில் புற்றுநோய் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டபோது, அவரது சிறுநீரகத்தின் ஒரு பகுதி வெட்டி எடுத்தோம். அதன்பின், ஷம்சியின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரது சிறுநீரகத்தையே வெளியே எடுத்து கட்டியை அகற்றிவிட்டு மீண்டும் பொருத்த முடிவு செய்தோம்' என்கிறார்கள்.
உடலிலிருந்து சிறுநீரகத்தை வெளியே எடுத்து, சிறுநீரகத்திலிருந்து கட்டியை அகற்றிவிட்டு, மீண்டும் அதை உடலில் பொருத்தும் இந்த 11 மணி நேர அறுவை சிகிச்சை, ஐக்கிய அரபு நாடுகளில் முதல் முறையாக செய்யப்பட்டுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)