ஆப்கானில் இருந்து தப்பி ஓட துடிக்கும் மக்கள்!.. தூக்கிவிட ஆள் இல்லாத துயரம்!.. இறுதி நேரத்தில் கைவிரித்த அமெரிக்கா!.. கண்ணீர் பின்னணி!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் இருந்து அவசர அவசரமாக மக்கள் வெளியேறி வரும் சூழலில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து, அங்கு தாலிபான்களுக்கும், அந்நாட்டு அரசுக்கும் இடையிலான போர் தீவிரமான நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாலிபான்கள் தலைநகர் காபூலை கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஆப்கானிஸ்தான் மீண்டும் தாலிபான்கள் வசமானது. தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்ததும் அந்த நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு தப்பி ஓடினார்.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற மக்கள் கூட்டம் கூட்டமாக விமான நிலையங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். ஆப்கன் மக்களை அகதிகளாக ஏற்று அடைக்கலம் கொடுக்க சில நாடுகள் முன்வந்துள்ள நிலையில், அவர்களை பத்திரமாக வெளியேற்றும் பணியில் அதிர்ச்சி திருப்பம் ஒன்று அரங்கேறியுள்ளது.
"எந்த ஒரு பாதையும் பாதுகாப்பானது அல்ல" என்று அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது. எனினும், காபூல் விமான நிலையத்தை அமெரிக்காவின் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் தான் வைத்துள்ளனர்.
அமெரிக்க குடிமக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க வீரர்கள் கடந்த சில நாட்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் தான், ஆப்கானை விட்டு வெளியேற நினைப்பவர்களை காபூல் விமான நிலையத்திற்கு அழைத்து வருவதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.