‘பச்சைக்கொடி காட்டிய நாடு’.. இந்தியாவில் இருந்து தாராளமா இங்க வரலாம்.. நீக்கப்பட்டது தடை..!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா தொற்று காரணமாக பல நாடுகள் சர்வதேச விமான சேவைகளில் கடுமையான கட்டுபாடுகள் விதித்துள்ளன.

கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் இருந்து செல்லும் விமானங்களுக்கு ஒரு சில நாடுகளில் தற்காலிக தடை விதித்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய விமானங்களுக்கு தடை விதித்து ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமான போக்குவரத்திற்கான தடையை நாளை (05-08-2021) முதல் ஐக்கிய அரபு அமீரக அரசு நீக்க முடிவு செய்துள்ளது. இதனை அந்நாட்டின் தேசிய அவசர மற்றும் நெருக்கடி மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆனாலும் ஐக்கிய அரபு அமீரகம் வரும் பயணிகள் நுழைவு அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும் என்றும், இந்திய பயணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்று அல்லது பயணம் செய்வதற்கு 48 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடைபெற்று கொரோனா தொற்றால் பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது. வரும் செப்டம்பர் மாதம் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், அந்நாட்டில் சர்வதேச விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டது, ஐபிஎல் அணிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. தற்போது அந்த தடை நீக்கப்பட்டுள்ளதால், ஐபிஎல் அணிகளின் நிர்வாகிகள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்று போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வார்கள் என தெரிகிறது.

மற்ற செய்திகள்
