‘டிரம்ப் மரண கடிகாரம்’!.. அமெரிக்காவை அதிரவைத்த பிரபல ‘ஹாலிவுட்’ இயக்குநர்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | May 12, 2020 07:02 PM

நியூயார்க் மாகாணத்தில் 'டிரம்ப் மரண கடிகாரம்' என பிரபல ஹாலிவுட் இயக்குநர் விளம்பர பலகை வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trump Death Clock claims to count avoidable COVID19 deaths in US

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதில் அமெரிக்காவில் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை அமெரிக்காவில் 13 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 81,491 பேர் வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர். இதில் குறிப்பாக நியூயார்க் மாகாணத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகையில், ‘டிரம்ப் மரண கடிகாரம்’ என குறிப்பிட்டு ‘அதிபர் டிரம்ப் விரைவாக செயல்பட்டு நடவடிக்கைகளை எடுத்திருந்தால் பெரிய பாதிப்பு ஏற்படாமல் தடுத்திருக்கலாம்’ என குறிப்பிட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை காட்சி படுத்தப்பட்டிருந்தது. இந்த விளம்பரத்தை பிரபல ஹாலிவுட் திரைப்பட இயக்குநர் ஜாரேக்கி என்பவர் டைம்ஸ் கட்டிடத்தில் நிறுவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.