'ஏர் இந்தியா' விமானிகள் 5 பேருக்கு 'கொரோனா' தொற்று உறுதி!.. 'கடைசியா அவங்க போனது இங்கதான்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாஏர் இந்தியா விமானிகள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக உலக நாடுகள் முழுவதும் பல்வேறு தடுப்பு வழிமுறைகளை கையாண்டு வருகின்றன. அதில் முதன்மையான தடுப்பு முறையாக லாக்டவுன் எனப்படும் உலகநாடுகளிடையே, மாகாணங்கள் மற்றும் நகரங்களுக்கிடையேயான பொது முடக்கம் மற்றும் முழுநேர பகுதிநேர ஊரடங்கு. இதன் அடிப்படையில் இந்தியாவிலும் ஊரடங்கு மற்றும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.
இதனை அடுத்து விமான போக்குவரத்து சேவை இயங்காது என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் தற்போது இந்தியாவில் 3 கட்ட ஊரடங்கு உத்தரவுக்கு பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இதனை அடுத்து ஏர் இந்தியா விமான சேவை மீண்டும் தொடங்கியது. இதன் தொடக்கமாக வந்தே பாரத் மிஷனின் கீழ், அமெரிக்காவில் இருந்து முதல் விமானம் இந்தியாவுக்கு இன்று புறப்பட்டது. இதேபோல் இந்தியாவில் இருந்தும் ஏர் இந்தியா விமானம் வெளிநாடுகளுக்கு புறப்படத் தொடங்கியது.
இந்த நிலையில் சீனாவில் இருந்து மருந்து உள்ளிட்ட பொருட்களை கார்கோ விமானங்கள் மூலம் கொண்டு வந்த ஏர் இந்தியா விமானிகள் 5 பேருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விமானிகள் 5 பேருக்கும், மும்பையில் இருந்து அடுத்த விமானத்தை இயக்குவதற்கு தயாராவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.