"முக்கால்வாசி ஊரடங்கு தளர்வு.. ஓரிரு வாரங்களில் கால்பந்து போட்டி!".. அதிபரின் அறிவிப்புக்கு பின்.. 'காத்திருந்து' மீண்டும் 'தலைதூக்கும்' கொரோனா வைரஸ்.. அதிர்ந்துபோன நாடு!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | May 11, 2020 10:05 AM

இதுவரை ஜெர்மனியில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 218 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதோடு இவர்களுள் 7 ஆயிரத்து 395 பேர் இதுவரை உயிரிழந்துமுள்ளனர்.‌

covid19 spreading again after lock down relaxation in Germany

ஜெர்மனியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தை முற்றிலுமாக நீக்கக்கோரி ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனையடுத்து ஜெர்மனியிலுள்ள 16 மாகாணங்களின் முக்கியத் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு அந்த நாட்டின் அதிபர் ஏஞ்சலா மெர்கல் நாடு முழுவதும் விரிவான முடக்க நிலை தளர்வுகள் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.‌

இந்த அறிவிப்பின்படி ஜெர்மனி முழுவதும் அனைத்து கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் கூட தற்போது தளர்த்தப்பட்டன. அதுமட்டுமல்லாமல் ஓரிரு வாரங்களில் ஜெர்மனியின் பிரபல கால்பந்து விளையாட்டு போட்டியும் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த முடக்க நிலை தளர்த்தப்படுவதற்கான அறிவிப்பை வெளியிட்டு சிலநாட்கள் கூட ஆகாத நிலையில், அங்கு கட்டுக்குள் வாழ்ந்ததாக அனைவராலும் நம்பப்பட்ட கொரோனா நோய்த்தொற்று மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது என்பதுதான்  ஜெர்மனியை அதிர்ச்சிக்குள்ளாக்கிய தகவல். இது பற்றி முதலில் பேசிய ராபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் கோவிட்-19 வைரஸ் இருப்பதாக உறுதி செய்யப்பட்ட ஒருவரின் மூலம் இந்த நோய்த் தொற்று பரவ தொடங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.