கொரோனாவால் 'முதல் தூய்மைப் பணியாளர்' சென்னையில் 'உயிரிழப்பு'!..'தமிழகத்தில்' 45-ஆக 'உயர்ந்த' பலி 'எண்ணிக்கை'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | May 10, 2020 09:08 AM

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் முதன்முறையாக தூய்மைப் பணியாளர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TN first Sanitary Worker dead due to covid19 in chennai

இந்தியாவில் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62,000ஐயும்,  கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 2,000ஐ தாண்டியுள்ள நிலையில், தமிழகத்தைப் பொருத்தவரை மாநிலத்தின் மொத்த வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை  6,535 ஆக உள்ளது. இதில் 1824 நபர்கள் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 4664 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 58 வயதான தூய்மைப் பணியாளருக்கு நேற்று வரை எவ்வித அறிகுறியுமின்றி இல்லை என்று தெரியவருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45-ஆக அதிகரித்துள்ளது.