"நாடு சவக்காடா மாறிக்கிட்டு வருது!".. "கொரோனாவுக்கு எதிரா ட்ரம்ப் எடுக்குற நடவடிக்கைலாம்".. கொந்தளித்த ஒபாமா!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | May 10, 2020 11:11 AM

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகள் ஒரு குழப்பமான பேரிடர் மேலாண்மையாக இருப்பதாக முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா குற்றம் சாட்டியுள்ளார்.

chaotic disaster, obama over US president Trumps action amid covid19

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதும் பரவியதை அடுத்து தற்போது உலகில் 41 ஒரு லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அமெரிக்காவில் மட்டும் 13 லட்சத்து 47 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 80 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. இதனால் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில், கடந்த மார்ச் மாதம் முதலே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதோடு மக்கள் தத்தம் பணிக்கும் திரும்பி அனுப்பப்பட்டனர். இதனிடையே சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த ஊரடங்கு தளர்வு நடவடிக்கையினால் கொரோனா பரவும் நிலை மேலும் தீவிரமாகும் என்றும் எச்சரித்தனர்.

இதனிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கொரோனா குறித்த கருத்துக்கள் பலவும் சர்ச்சைக்குள்ளாகின.  கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா ஒரு பெரிய அச்சுறுத்தலே கிடையாது என்பது போல் பேசிட ட்ரம்ப், மார்ச் மாத நடுவில் கொரோனா பாதிப்பின் தீவிரத்தை ஒப்புக் கொண்டு பேசினார். அதேசமயம் ஏப்ரல் மாதம் கொரோனாவைத் தடுக்க கிருமிநாசினியை ஊசி மூலம் செலுத்தி கொரோனாவை கட்டுப்படுத்தலாம் என்று கூறினார். ஆனால் இதற்கு மருத்துவ நிபுணர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்ததும் அது வெறும் நகைச்சுவைக்காக சொன்னது என்று பேசினார்.‌ அதுமட்டுமல்லாமல் கடந்த வாரம் கொரோனா எதிர்ப்புப் படையை கலைக்கப்போவதாக தெரிவித்த ட்ரம்ப், பின்னர் பொருளாதார மேம்பாட்டுக்காக அவ்வாறு கூறியதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் வைரஸ் பரவலுக்கு தான் பொறுப்பு இல்லை என்று கூறியதோடு கொரோனா விஷயத்தில் முன்னாள் அதிபர் ஒபாமாவின் மீதும் குற்றம் சாட்டினார் அதிபர் டிரம்ப்.

இந்த நிலையில்தான் அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஓபாமா டிரம்பின் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.  அதன்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அமெரிக்காவின் போக்கு மிகவும் மோசமாக உள்ளதாகவும் இதற்கு அதிபர் டிரம்பின் நடவடிக்கைகளும் ஒரு காரணமாக இருப்பதாகவும் தெரிவித்ததோடு வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் தான் ஜோ பிடனுக்கு ஆதரவு அளிக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய ஒபாமா, ஒரு நல்ல அரசை கூட மோசமாக மாற்றும் அளவுக்கு டிரம்பின் தற்கால நடவடிக்கைகள் இருப்பதாகவும் கொரோனாவுக்கு எதிரான அவரது நடவடிக்கைகளை ஒரு குழப்பமான பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகள் என கூறலாம் என்றும் இந்த குழப்பங்களை மறைப்பதற்காக டிரம்ப் வேறு பல நடவடிக்கைகளை எடுத்து மென்மேலும் குழப்பத்தில் ஆழ்த்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, திறமையற்ற ஒரு ஆட்சியாளரின் கீழ் நாடு சவக்காடாக மாறுவதாகவும், சுயநலத்துடனும், பழமைவாதியாகவும், நாட்டை பிளவுபடுத்தும் நோக்கிலும் மற்றவர்களை எதிரியாகப் பாவிப்பது என ட்ரம்ப் அரசாங்கத்தின் போக்கு மொத்தமும் அமெரிக்காவின் தற்போது பாதிப்பதாகவும், ஆனால் உலக நாடுகள் நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறது என்பதை அவரது நிர்வாகம் மறந்து செயல்படுவதாகவும் தெரிவித்த ஒபாமா இழப்புகளை துச்சமாகக் கருதும் மனப்போக்கு காரணமாகவே அமெரிக்கா தற்போது பெரிய இழப்பை சந்தித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.